வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி வழங்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது நேரடி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் வலி​யுறுத்தி டாக்கா பல்​கலைக்​கழக மாணவர்​கள் நேற்று மிகப்​பெரிய போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து குமிலா மாவட்ட காவல் துறை தலை​வர் நஸிர் அகமது கான் கூறிய​தாவது: குமிலா மாவட்​டம் முராட்​நகரில் நடை​பெறும் ஹரி சேவா திரு​விழாவை பார்ப்​ப​தற்​காக 21 வயது இந்​துப் பெண் அவரது பெற்​றோர் வீட்​டுக்கு குழந்​தை​யுடன் வந்​துள்​ளார். இவரது கணவர் துபா​யில் வேலை​பார்த்து வரு​கிறார்.

கடந்த ஜூன் 26-ம் தேதி ராம்​சந்​திரபூரைச் சேர்ந்த பெஸோர் அலி (36) என்​பவர் அந்த இந்​துப் பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்​துள்​ளார். மேலும், அந்​தப் பெண்ணை கொடூர​மாக தாக்கி நிர்​வாணப்​படுத்​தி​யதுடன் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலான பின்பே இந்த சம்​பவம் வெளிச்​சத்​துக்கு வந்​தது.

இதையடுத்​து, உள்​ளூரைச் சேர்ந்த முக்​கிய அரசி​யல்​வா​தி​யான பெஸோர் அலியை போலீ​ஸார் கைது செய்​தனர். பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் அடை​யாளத்தை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டதற்​காக மேலும் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு நஸிர் அகமது கான் தெரி​வித்​தார்.

இதனிடையே பாதிக்​கப்​பட்ட சிறு​பான்மை இந்து பெண்​ணுக்கு நீதி வழங்க கோரி டாக்கா பல்​கலைக்​கழக மாணவர்​கள் மிகப்​பெரிய பேரணியை நடத்​தினர். இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய அனை​வர் மீதும் நேரடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​பது போ​ராட்​டக்​காரர்​களின் கோரிக்​கை​யாக இருந்​தது.

நீதி​மன்​றம் உத்​தரவு: இந்து பெண்ணை நிர்​வாண​மாக்கி கொடூர​மாக சித்​ர​வதை செய்​யும் நபரிடம் அந்த பெண் தன்னை விட்​டு​விடும்​படி மன்​றாடும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. இதையடுத்​து, அந்த பதிவை உடனடி​யாக நீக்க வங்​கதேச உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. அத்​துடன் பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு தேவை​யான பாது​காப்பு மற்​றும் மருத்​துவ உதவி​களை வழங்​க​வும்​ நீதி​மன்​றம்​ உத்​தர​விட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.