24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

இந்தூர்: கர்​நாடக தலைநகர் பெங்​களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத். இவர் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் செய்​து, புது​மை​யான வீடு​களை வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வரு​கிறார். இந்த வரிசை​யில் மத்​திய பிரதேசம் இந்​தூரில் 24 கேரட் தங்​கத்​தால் அலங்​கரிக்​கப்​பட்ட வீடியோவை பிரி​யம் சரஸ்​வத் நேற்று முன்​தினம் தனது சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலை​தளங்​களி​லும் வைரலாக பரவி வரு​கிறது.

யூ டியூபர் பிரி​யம் வெளி​யிட்ட வீடியோ​வின் தொடக்​கத்​தில் வீட்​டின் போர்​டிகோ காண்​பிக்​கப்​படு​கிறது. அந்த போர்​டிகோ​வில் 1936-ம் ஆண்டு மெர்​சிடஸ் கார் முதல் அண்​மை​யில் அறி​முக​மான அனைத்து கார்​களும் வரிசை​யாக அணிவகுத்து நிற்​கின்​றன. அடுத்​த​தாக வீட்​டுக்​குள் நுழைந்​தால் எங்கு பார்த்​தா​லும் தங்​கம் ஜொலிக்​கிறது.

மின்​சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்​களும் 24 கேரட் தங்​கத்​தில் தயாரிக்​கப்​பட்டு இருக்​கிறது. பிரம்​மாண்ட வீட்​டில் விசால​மான 10 படுக்கை அறை​கள் உள்​ளன. வீட்​டின் பிர​தான இடங்​களில் தங்​கத்​தில் செதுக்​கப்​பட்ட சிலைகள் மின்​னுகின்​றன. சில நாற்​காலிகளும் தங்​கத்​தில் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன.

யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத்​திடம், வீட்​டின் உரிமை​யாளர் கூறும்​போது, “எங்​கள் குடும்​பத்​தில் மொத்​தம் 25 பேர் உள்​ளோம். முதலில் ஒரு பெட்​ரோல் நிலை​யத்தை நடத்​தினோம். இதன்​பிறகு அரசிடம் இருந்து ஒப்​பந்​தங்​களை பெற்று சாலை, கட்​டிடங்​களை கட்டி கொடுத்​தோம். தற்​போது 300 அறை​கள் கொண்ட பிரம்​மாண்ட ஓட்​டலை கட்டி வரு​கிறோம்’’ என்று தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.