“கூலி வேலைப் பார்த்து எங்க அப்பாவை என் பெரியப்பா படிக்க வச்சாரு, என்னையும்..'' – விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

ஜூலை 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

 'ஓஹோ எந்தன் பேபி'
‘ஓஹோ எந்தன் பேபி’

அதில் நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தை மற்றும் பெரியப்பா குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“எனது அப்பாவும், பெரியப்பாவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா நன்றாக படிப்பார். பெரியப்பாவிற்கு சினிமாவில்தான் ஆர்வம்.

அந்த நேரத்தில் படிப்பதற்கு கூட அவர்களிடம் பணம் இருக்காது. ஆனாலும் எப்படியாவது படங்களின் முதல்காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்பது இருவரின் ஆசை.

பணம் இல்லாததால்  இரண்டு பேரும் ஒரு டிக்கெட் வாங்கி  பாதிப் படத்தை அப்பாவும், பாதிப் படத்தை பெரியப்பாவும் பார்த்து பின்னர் தங்களுக்குள் கதையை விவரித்துக் கொள்வார்களாம்.

இந்த மாதிரியான ஒரு குடும்பம்தான் எங்களுடையது. 10th வரைக்கும் இருவரும் கஷ்டப்பட்டு படித்திருக்கிறார்கள். அதற்கு மேல் அவர்களால் படிக்க முடியவில்லை.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

பிறகு எனது பெரியப்பாத்தான் கூலி வேலைப் பார்த்து எனது அப்பாவைப் படிக்க வைத்து ஐ.பி.எஸ் ஆக வைத்திருக்கிறார். அதனால் ருத்ராவை சரியான படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது என்னுடைய கடமையாக இருந்தது.

நான் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு விபத்தால் அது முடியாமல் போய்விட்டது. நான் சினிமாவிற்கு வருவதற்கும் எனது பெரியப்பாதான்  காரணம். அவரை நான் ‘டாடி’ என்று தான் அழைப்பேன்” என்று விஷ்ணு விஷால் பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.