தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 மாதங்​களில் 2.80 லட்​சம் பேர் நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தெரு நாய்​கள், வளர்ப்​புப் பிராணி​கள் கடித்து காயமடை​யும் சம்​பவங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கின்​றன. ரேபிஸ் தொற்​றி​லிருந்து செல்​லப் பிராணி​களை​யும், மனிதர்​களை​யும் காப்​ப​தற்கு ரேபிஸ் தடுப்​பூசி உள்​ளது.

ஆனால் தெரு நாய்​களுக்​கும், செல்​லப் பிராணி​களுக்​கும் தடுப்​பூசி முறை​யாக செலுத்​தப்​ப​டாத​தால், மனிதர்​களை நாய்​கள் கடிக்​கும்​போது ரேபிஸ் தொற்று ஏற்​படு​கிறது. கடந்த ஆண்​டில் மட்​டும் நாய்க்​கடி​யால் 4.80 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டு, 40 பேர் ரேபிஸ் தொற்​றால் இறந்​துள்​ளனர்.

இந்த ஆண்​டில் கடந்த 6 மாதங்​களில் 2.80 லட்​சம் பேர் வரை நாய்க்​கடி பாதிப்​புக்கு உள்​ளாகி​யுள்​ளனர். நாய்க்​கடிக்கு உள்​ளானவர்​களில் சிலர் உரிய நேரத்​தில் தடுப்​பூசி செலுத்​திக்​கொள்​ளாமல், கால​தாமத​மாக சிகிச்சை பெற்​ற​தால் உயி​ரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் நாய்க்​கடி​யால் லட்​சக்​கணக்​கானோர் பாதிக்​கப்​பட்​டாலும், அனை​வருக்​கும் ரேபிஸ் தொற்று ஏற்​படு​வ​தில்​லை.

நாய் கடித்​தாலே ரேபிஸ் தொற்று ஏற்​பட்டு விடு​வ​தில்​லை. ரேபிஸ் வைரஸால் பாதிக்​கப்​பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்​கு, பூனை, வவ்​வால் உள்​ளிட்ட விலங்​கு​கள் கடித்​தா​லும் பாதிப்பு ஏற்​படும். எந்த வகை விலங்கு கடித்​தா​லும் முறை​யாக சிகிச்சை பெற வேண்​டும். இதற்​கான சிகிச்சை முறை அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் தயார் நிலை​யில் உள்​ளது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.