கோவா-புனே இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டம் தளர்ந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கோவாவிலிருந்து இன்று புனேவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தபோதிலும், பயணம் முழுவதும் கேபினில் அழுத்தம் சீராக இருந்தது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு காயமோ அல்லது பெரிய பிரச்சினைகளோ இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
