RailOne : இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

RailOne App Features : இந்திய ரயில்வே துறை பொதுமக்கள் ரயில் தொடர்பான சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும் பெறும் வகையில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ரயில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் ரயில் ஒன் செயலியை மத்திய அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. Google Play Store மற்றும் Apple App Store இரண்டிலும் கிடைக்கும் இந்த ஆப், டிக்கெட் புக் செய்தல், ரயிலில் உணவு ஆர்டர் செய்தல், ரயில் லொகேஷனை பார்ப்பது, PNR ஸ்டேட்டஸ் சரிபார்ப்பது உள்ளிட்ட பல டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து கொடுக்கக்கூடியது.

RailOne ஆப்: ஒரே ஆப்பில் பல்வேறு வசதிகள்

RailOne ஆப் என்பது, ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட SwaRail ஆப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதுவரை, இந்த ஆப் ஏற்கனவே Play Store-ல் 1 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது.

RailOne ஆப்பின் முக்கிய வசதிகள்:

– ரிசர்வ் மற்றும் ஜெனரல் டிக்கெட் புக் செய்தல்
– லைவ் ரயில் டிராக்கிங் மற்றும் கோச்சின் நிலைப்பாடு (Coach Position)
– ரயிலில் உணவு ஆர்டர் செய்தல்
– பார்சல் மற்றும் கார்கோ சேவைகள் தொடர்பான விளக்கம்
– R-Wallet மூலம் பேமெண்ட் செய்தல்
– Rail Madad மூலம் புகார்களைப் பதிவு செய்தல்

மேலும், இந்த ஆப்பில் “Do You Know” என்ற trivia பகுதி உள்ளது, இங்கு இந்திய ரயில்வே பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அதாவது, முதல் பயணிகள் ரயில் அல்லது இந்தியாவின் நீளமான ரயில் பாதை வழங்கப்படுகிறது. பயனர்கள் ஆப்பை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் பயன்படுத்தலாம்.

RailOne ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது?

– Play Store அல்லது App Store இலிருந்து டவுன்லோட் செய்யவும்.
– மொபைல் நம்பர் மூலம் ரிஜிஸ்டர் செய்யவும் அல்லது உங்கள் Rail Connect / UTS கிரெடென்ஷியல்ஸ் மூலம் லாக் இன் செய்யவும்.
– டிக்கெட் புக், ரயில் தேடுதல், கோச்சின் நிலைப்பாடு, உணவு ஆர்டர், பார்சல் இன்குயரி போன்ற வசதிகளைப் பயன்படுத்தவும்.

2025-ல் ரயில் டிக்கெட் புக் செய்வதில் 3 முக்கிய அப்டேட்டுகள்

RailOne ஆப் வெளியீட்டுடன், இந்திய ரயில்வே அதன் டிக்கெட் மற்றும் ரிசர்வேஷன் சிஸ்டத்தை மேம்படுத்தி 3 பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்னதாக ஒரு சார்ட் தயாராகும். முன்பு கரண்ட் சார்ட் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னதாக தயாராகும். மதியம் 2:00 PM க்கு முன் புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய இரவு 9:00 PM க்குள் சார்ட் தயாரிக்கப்படும். இது பயணிகளுக்கு அவர்களின் வெயிட்லிஸ்ட் ஸ்டேட்டஸை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும். தட்கல் டிக்கெட் புக் செய்வது ஆதார் வெரிஃபைட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். OTP-அடிப்படையிலான authentication மூலம் பயனர்கள் வெரிஃபை செய்ய வேண்டும். இந்த செயலி நிமிடத்திற்கு 1,50,000 ரிசர்வேஷன்களை கையாளும் திறன் கொண்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.