லிவர்பூல் கால்பந்து கிளப்பின் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் அணியின் தேசிய வீரருமான டியோகோ ஜோட்டா ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலபந்து ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 28 வயதான டியோகோ ஜோட்டா ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ஜமோரா என்ற இடத்தின் அருகே உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்றொரு கால்பந்து வீரரும் டியாகோ ஜோட்டாவின் சகோதரருமான ஆண்ட்ரே பிலிப்பும் உயிரிழந்தார்.
டியோகோ ஜோட்டாவும், அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா (26) ஆகியோர் லம்போர்கினி சொகுசு காரில் சென்றுள்ளனர். அப்போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, திடீரென காரின் டயர் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டாவும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த ஜமோரா மாகாணத்தின் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டனர்.
10 நாட்களுக்கு முன்பு நடந்த திருமணம்
போர்ச்சுகல் கால்பந்து அணியின் வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்துள்ளது. இவர் ரூட் கார்டோசோ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இவர் லிவர்பூலுக்காக 182 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 65 கோல்களை அடித்து அசத்துள்ளார். கடந்த சீசனில் அவர் ஆறு முறை கோல் அடித்து ஆர்னே ஸ்லாட்டின் அணி பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல உதவினார். அதேபோல், மெர்சிசைட் அணியுடன் FA கோப்பை மற்றும் லீக் கோப்பையையும் லிவர்பூல் கிளப் வெல்ல பெரும் உதவியாக டியாகோ ஜோட்டா இருந்தார்.
ஆண்ட்ரே சில்வா
ஆண்ட்ரே சில்வா போர்ச்சுகலுக்காக 49 போட்டிகளில் விளையாடி, இரண்டு முறை UEFA நேஷன்ஸ் லீக்கை வென்றுள்ளார். இவர் போர்த்துகீசிய அணியான எஃப்சி பெனாஃபீலுக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். போர்ச்சுகலுக்காக 49 போட்டிகளில் விளையாடி, இரண்டு முறை UEFA நேஷன்ஸ் லீக்கை வென்றுள்ளார். இவர்களது இறப்பு ரசிகர்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டினோ ரொனால்டோ இரங்கல்
இது அர்த்தமற்றது. இப்போதுதான் நாங்கள் தேசிய அணியில் ஒன்றாக இருந்தோம், இப்போதுதான் நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் மனைவிக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்கள் அனைவருக்கும் உலகில் பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். டியோகோ மற்றும் ஆண்ட்ரே, சாந்தியடையுங்கள். நாங்கள் அனைவரும் உங்களை மிஸ் செய்வோம் என அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: பும்ரா முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடாது – ரவி சாஸ்திரி
மேலும் படிங்க: CSK குறிவைத்திருக்கும் அதிரடி வெளிநாட்டு வீரர்… மிடில் ஆர்டர் பலமாகும் – மினி ஏல பிளான்!