“திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை" – 'பீனிக்ஸ்' குறித்து ஆர்த்தி கணேஷ்

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடிப்பில் உருவான ‘பீனிக்ஸ்’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்த்தி கணேஷ் பீனிக்ஸ் திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம், “திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை இருக்கு. பணக்காரங்களோட சின்ன ஈகோ ஏழைகள் உயிரை எப்படி வாங்குறதுங்கிறதுதான் கதை. இந்தப்படம் பார்க்கும்போது, கைய உடைச்சி, கால உடைச்சி, மிளகாய் பொடியெல்லாம் போட்டுன்னு… நாம அந்த இடத்துல இல்லைனாலும் அந்த சில நிமிட காட்சி ரொம்ப கஷ்டமா இருந்தது.

ஆர்த்தி கணேஷ்

அதுக்கு பழிவாங்குற காட்சியிலதான் படம் நிறைய கைதட்டல் வாங்குது. படம் ரொம்ப நல்லா இருந்தது. சூர்யா சேதுபதிக்கு இது முதல் படம் மாதிரியே தெரியல. டான்ஸ், பைட்னு சூப்பரா கலக்கியிருக்காரு. இசையும் சூப்பரா வந்துருக்கு.மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்.” எனப் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் படத்தை இயக்கிய அனல் அரசு, “இந்தப் படத்துக்காக சூர்யா சேதுபதியை ஒன்றரை வருஷம் ரெடி பண்ணேன். உடல் எடையை இந்தப் படத்துக்காக குறைச்சார். ஷூட்டுக்கு முன்னாடி ஹார்டு வொர்க் பண்ணதால, எங்களுக்கு ஷூட் நேரத்துல எந்தப் பிரச்னையும் வரல.

இந்தப் படம் இரண்டாம் பாகத்துக்கான லீடு கொடுக்கல. இது never end story. காலம்தான் அடுத்து நடக்கப்போறதை முடிவு பண்ணும். எல்லாருக்கும் இந்தப் படம் புடிக்கும். மக்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்” என்றார்.

சூர்யா சேதுபதி – அனல் அரசு

இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் முத்துக்குமார், “இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரம் சாகும் போதும் வருத்தப்படுறாங்க. நான் சாகும் இடம் வரும்போது எல்லாரும் சந்தோஷப்பட்டு கைதட்டி கொண்டாடுறாங்க.

அப்படியான கதாப்பரத்திரம் அது. மிகச் சிறப்பான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எல்லா எமோஷனலும் கலந்து படம் சிறப்பா வந்திருக்கு. இந்தப் படத்தில் நடித்த எல்லாருக்கும் வாழ்த்துகள்.”என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.