மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா திட்டம்: 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத பிரதேசத்​தில் ஒரு துணிச்​சலான பயணத்தை தொடங்​கியது.

தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​து​வ​தில் இந்​தி​யர்​களின் திறனை சந்​தேகித்து பல தசாப்​தங்​கள் கழிந்​தா​லும், நாங்​கள் இந்த அணுகு​முறையை மாற்​றி, தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​து​வ​தில் இந்​தி​யர்​களின் திறனை நம்​பினோம், இது​போலவே சமத்​து​வ​மின்​மையை தொழில்நுட்பம் அதி​கரிக்​கும் என்​ப​தில் நாங்​கள் நம்​பிக்கை கொள்​ள​வில்​லை.

இத்​திட்​டம் தற்​போது இருப்​பவர் – இல்​லாதவர் இடையி​லான இடைவெளியை போக்​கும் பால​மாக திகழ்​கிறது. நோக்​கம் சரி​யாக இருக்​கும்​போது குறைந்த அதி​காரம் கொண்​ட​வர்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தாக புதுமை திகழ்​கிறது. அனை​வருக்​கு​மான அணுகு​முறை​கள் விளிம்பு நிலை மக்​களின் வாழ்க்​கை​யில் அர்த்​த​முள்ள மாற்​றங்​களை கொண்டு வந்​துள்​ளன.

பூமிக்​கும் சந்​திரனுக்​கும் இடையி​லான தூரத்​தின் 11 மடங்கு தூரத்​துக்கு சமமான 42 லட்​சம் கி.மீட்​டருக்​கும் அதி​க​மான ஆப்​டிகல் ஃபைபர் கேபிள், தற்​போது மிக​வும் தொலை​தூர கிராமங்​களை​யும் இணைக்​கிறது. இந்​தி​யா​வின் 5ஜி திட்​டம் உலகில் வேக​மான திட்டங்​களில் ஒன்​றாகும். இத்​திட்​டத்​தில் 2 ஆண்​டு​களில் 4.81 லட்​சம் அடிப்​படை நிலை​யங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன. அதிவேக இணை​யம் நகர்ப்​புற மக்​களை மட்​டுமல்ல, கல்​வான் பள்​ளத்​தாக்​கு, சியாச்​சின், லடாக் உள்​ளிட்ட ராணுவ நிலைகளை​யும் அடைந்​துள்​ளது.

இந்​தி​யா​வின் டிஜிட்​டல் உள்​கட்​டமைப்​பின் கீழ் இருக்​கும் தளங்​களான ஆதார், கோ-​வின், டிஜி-லாக்​கர், பாஸ்ட்​-டேக், பிஎம்​.​ வாணி, ஒன் நேஷன் ஒன் சப்​ஸ்​கிரிப்​ஷன் ஆகியவை இப்​போது உலகள​வில் ஆய்வு செய்​யப்​பட்​டு, ஏற்​றுக்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. உலகின் மிகப்​பெரிய தடுப்​பூசி இயக்​கத்தை கோ-​வின் செயல்​படுத்​தி, 220 கோடிக்​கும் அதி​க​மான சான்​றிதழ்​களை வழங்​கியது. டிஜி-லாக்​கர் இப்​போது 54 கோடி பயனர்​களுக்கு சேவை செய்​கிறது.

775 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​களை வழங்​கு​கிறது. டிஜிட்​டல் இந்​தியா ஒரு மக்​கள் இயக்​க​மாக மாறி​யுள்​ளது, மேலும் தற்​சார்பு இந்​தி​யாவை உரு​வாக்​கு​வதற்​கும், புதுமை கண்​டு​பிடிப்​பு​களில் இந்​தி​யாவை உலகின் நம்​பக​மான கூட்​டாளி​யாக மாற்​று​வதற்​கு​மான மைய​மாக விளங்​கு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

நிர்​மலா சீதா​ராமன்: நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், ‘‘டிஜிட்​டல் இந்​தியா வெறும் அரசுத் திட்​ட​மாக மட்​டும் திகழ​வில்​லை. மாறாக மக்​கள் இயக்​க​மாக​வும் மாறி​யுள்​ளது. நாட்​டின் தொலை​தூரப் பகு​தி​களுக்கு இணைய வசதியை கொண்டு செல்​வது முதல், அரசு சேவை​களை ஆன்​லைனில் கிடைக்​கச் செய்​வது வரை, பிரதமர் மோடி அரசின் ‘டிஜிட்​டல் இந்​தி​யா’ திட்​டம் நாடு முழு​வதும் உள்ள டிஜிட்​டல் இடைவெளியை உண்​மை​யிலேயே குறைத்​துள்​ளது” என்று கூறி​யுள்​ளார்.

வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் தனது பதி​வில், ‘‘யுபிஐ, நேரடிப் பணப்​பரி​மாற்​றம் போன்ற பல முயற்​சிகளால், நாடு டிஜிட்​டல் நிர்​வாகத்​தில் இருந்து உலகளா​விய டிஜிட்​டல் தலை​மையை நோக்கி நகர்​கிறது’’ என்று கூறி​யுள்​ளார். மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தனது பதி​வில், “மின்​னணு தேசிய வேளாண் சந்தை (eNAM) மூலம் விவ​சா​யத்​தில் டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் புரட்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது நாடு முழு​வதும் நுகர்​வோர், விவ​சா​யிகள் நேரடி​யாக இணைய உதவு​கிறது. 1,400-க்​கும் மேற்​பட்ட மண்​டிகளில் ரூ.4 லட்​சம் கோடி வர்த்​தகம் மற்​றும் 1.7 கோடி விவ​சா​யிகளுக்கு அதி​காரம் அளிக்​கப்​பட்​டதன்​ மூலம்​, இதன்​ தாக்​கம்​ நிதர்​சன​மானது” என்​று கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.