டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்!

இந்திய டெஸ்ட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் முதல் இன்னிங்ஸில் 269  ரன்கள் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் கேப்டனாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.  

இந்த நிலையில்,டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில் முன்னாள் அதிரடி வீரர்தான் முதல் இரண்டு இடத்தில் உள்ளார். சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் அடித்து முதல் இடத்திலும் முல்தான் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளார். இதையடுத்து மூன்றாவது இடத்தில், கருண் நாயர் உள்ளார். அவர் சென்னை சேப்பாக் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்கள் அடித்து உள்ளார். 

நான்காவது இடத்தில் விரேந்தர் சேவாக் உள்ளார். அவர் பிராபோர்ன் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக 293 ரன்கள் அடித்துள்ளார். இப்போட்டியில் அவர் 300 ரன்களை அடித்திருந்தால், மூன்று முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். இதனைத் தொடர்ந்து 5வது இடத்தில் விவிஎஸ் லக்‌ஷ்மணனும் 6வது இடத்தில் ராகுல் டிராவிட்டும் உள்ளனர். 

விவிஎஸ் லக்‌ஷ்மணன் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்களை அடித்துள்ளார். ராகுல் டிராவிட் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 270 ரன்களை அடித்திருந்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 269 ரன்களை விளாசி சுப்மன் கில் இப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்திருக்கிறார். 

மேலும் படிங்க: ஒரே ஒரு ஐபிஎல் சீசன் தான்.. கோடீஸ்வரரான வைபவ் சூர்யவன்சி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள் அடித்த 10 வீரர்களின் பட்டியல்!

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.