தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி? முழு விவரம்

How to Start TN eSevai Center : தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது (TNeGA) “அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின்” கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இசேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கம்ப்யூட்டர் (Computer), பிரின்ட்டர் (Printer), ஸ்கேனர் (Scanner), கைரேகை அங்கீகார சாதனம்( Biometric device), இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் (Ramp) போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிந்து கொள்ள tnesevai இணையதளத்தை பயன்படுத்தவும்.

ஆனால், தமிழ்நாடு அரசின் இ-சேவை (tn e sevai) மையத்தை தொடங்க வேண்டும் என்றால்www.tnesevai.tn.gov.in (அல்லது) www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் விண்ணப்பத்தை சரிபார்க்கப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000/- மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000/- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அல்லது தமிழ்நாடு அரசின் மின்ஆளுமை முகமை அலுவலகத்தைக் கூட தொடர்பு கொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.