இந்தியத் திரையுலகின் நடிகைகளில் மிகவும் கவனம் பெற்றவர் நடிகை சமந்தா. தொடர்ந்து வாழ்வின் பல்வேறு சிக்கல்களில் சிக்கி, அவ்வப்போது அது தொடர்பாக தன்னை ஆசுவாசப்படுத்தி எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்.
திருமணம் உறவு, உடல் நலம், உடற்பயிற்சி எனப் பல்வேறு விவகாரங்களில் எது குறித்தும் மனம் திறந்து பேசிவிடும் பழக்கமுடையவர். சமீபத்தில் அவரின் மார்க் சீட் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப்பேட்டியில், தன் காதலருக்காக பச்சைக் குத்திக்கொண்டது குறித்து பகிர்ந்திருக்கிறார். அவரின் பேட்டியில், “டாட்டூ குத்திக்கொள்வது எனக்கு வழக்கமாக இருந்த காலம் அது. அப்போது எனக்கு 18 வயது இருக்கும். ஒருவரை காதலித்தேன்.
அதுதான் என் முதல் காதல். அவரைதான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என உறுதியாக நம்பினேன். அதனால், அவருக்காக ஒரு டாட்டூ போட்டுக்கொண்டேன். அந்தக் காதல் என்னவானது, அந்த டாட்டூ என்னவானது என்பது குறித்தெல்லாம் சொல்லமாட்டேன்” என சிரித்துக்கொண்டே பேசினார்.
தன் சொந்த பார்ட் காஸ்ட் ஒன்றில் பேசும்போது, “ஒரு காலத்தில் என் செல்போனுடன் எனக்கு டாக்ஸிக் ரிலேசன்சிப் இருந்தது. அதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் தவறு எனத் தெரிந்துவிட்டால், அதை அப்படியே தொடரக்கூடாது. எனவே, மூன்று நாள் ‘மௌன ஓய்வு’ என முடிவு செய்தேன்.

மூன்று நாள்கள் செல்போன் இல்லாமல், யாருடனும் தொடர்புகொல்லாமல் இருந்தேன். எதையும் பார்க்கவில்லை, வாசிக்கவில்லை, எழுதவில்லை, என்னைத் தூண்டும் எந்த விஷயத்தையும் செய்யவே இல்லை. அப்படியே மூன்றுநாள் ஓய்வு முடித்தேன். நேரம் என் கட்டுப்பாட்டில் வந்தது” என்றார்.