ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான், சீனா, துருக்கியை எதிர்கொண்டோம்: ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது:

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​படும் தீவிர​வாத முகாம்​களை அழிக்க முடிவு செய்​யப்​பட்​டது. முதலில் 21 தீவிர​வாத முகாம்​கள் அடை​யாளம் காணப்​பட்​டன. கடைசி நேரத்​தில் 9 முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. அந்த முகாம்​கள் துல்​லிய தாக்​குதல்​கள் மூலம் முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன.

இதன்​பிறகு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் போர் நடை​பெற்​றது. நமக்கு ஓர் எல்​லை. ஆனால் நமது எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான், சீனா, துருக்கி என 3 நாடு​களை எதிர்​கொண்​டோம். பாகிஸ்​தான் முன்​வரிசை​யில் இருந்​தது. அந்த நாட்​டுக்கு பின்​னால் சீனா இருந்​தது. பாகிஸ்​தானுக்கு தேவை​யான அனைத்து ராணுவ உதவி​களை​யும் சீனா வாரி வழங்​கியது.

கடந்த பல ஆண்​டு​களாக பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு சீனா அதிநவீன ஆயுதங்​களை விநி​யோகம் வரு​கிறது. தற்​போது பாகிஸ்​தான் பயன்​படுத்​தும் ஆயுதங்​களில் 81 சதவீதம் சீன தயாரிப்பு ஆயுதங்​கள் ஆகும். போரின்​போது பாகிஸ்​தான் ராணுவத்​தின் மூலம் சீன ஆயுதங்​கள் சோதித்து பார்க்​கப்​பட்​டன. சுருக்​க​மாக சொல்​வதென்​றால், (சீ​னா​விட​மிருந்​து) கடன் வாங்​கிய கத்தி மூலம் இந்​தியா மீது தாக்​குதல் நடத்த பாகிஸ்​தான் முயற்சி செய்​தது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் ராணுவத்​தின் டிஜிஎம்ஓ அதி​காரி​கள் தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி கொண்​டிருந்​தனர். அந்த நேரத்​தில் இந்​திய படைகள் எங்​கெல்​லாம் நிலைநிறுத்​தப்​பட்டு இருக்​கிறது என்​பது குறித்த தகவல்​களை பாகிஸ்​தானுக்கு சீனா வழங்கி கொண்​டிருந்​தது. போரின்​போது இந்​தியா சார்ந்த உளவு தகவல்​களை, பாகிஸ்​தானுக்கு சீனாவே வழங்​கியது.

மேலும், பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு நூற்​றுக்​கணக்​கான ட்ரோன்​களை துருக்கி வாரி வழங்​கியது. இந்த ட்ரோன்​கள் இந்​தி​யா​வுக்கு எதி​ரான வான்​வழித் தாக்​குதலுக்கு பயன்​படுத்​தப்​பட்​டன. ஒரே நேரத்​தில் பலமுனை தாக்​குதல்​களை எதிர்​கொண்​டோம். ஆனால் எதிரி​களின் அனைத்து தாக்​குதல்​களை​யும் இந்​தி​யா​வின் முப்​படைகளும் இணைந்து வெற்​றிகர​மாக முறியடித்​தன.

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை, நமக்கு பல்​வேறு படிப்​பினை​களை கற்​றுத் தந்​திருக்​கிறது. இந்​திய வான் பாது​காப்பை மேலும் அதி​கரிக்க வேண்​டும். குறிப்​பாக ட்ரோன்​கள், ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்​கும் திறனை மேலும் அதி​கரிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.