ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 3 வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. காரணம் அவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். கடந்தாண்டு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை தான் பிடித்தனர். இந்த ஆண்டு முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், அடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குவாலிபயர் 2க்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல் ஏலத்தில் நிறைய நல்ல வீரர்களை அணியில் எடுத்து இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. போல்ட், பும்ரா, சான்டனர், தீபக் சாஹர் என்ற வலுவான பவுலிங் வைத்து இருந்தும் தோல்வி அடைந்தனர். இந்நிலையில் ஐபிஎல் 2026க்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி கழட்டிவிடும் மூன்று முக்கியமான வீரர்களை பற்றி பார்ப்போம். 

அர்ஜுன் டெண்டுல்கர் 

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் இடம் பெற்று வருகிறார். இருப்பினும் அவருக்கு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் 2025ல் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஆக்ஷனில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 2023 ஆம் ஆண்டு நான்கு போட்டிகளிலும், 2024 ஆம் ஆண்டு ஒரு போட்டி என மொத்தமாக இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். இந்த ஆண்டு மெகா ஏலத்தில் 30 லட்சத்திற்கு அவரை ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி கழட்டிவிட வாய்ப்புள்ளது. 

ரீஸ் டோப்லி

இங்கிலாந்து அணியை சேர்ந்த ரீஸ் டோப்லி இந்த ஆண்டு முழுவதும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதுவும் வேறு வழி இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விளையாட வைத்தது. விளையாடிய ஒரு போட்டியிலும் 3 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கழட்டி விட அதிக வாய்ப்புள்ளது. 

சரித் அசலங்கா

இலங்கை அணியைச் சேர்ந்த சரித் அசலங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தாலும் இந்த ஆண்டு முழுவதும் ஒரு போட்டியில் கூட அவர் விளையாட வில்லை. மேலும் அடுத்த ஆண்டு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. இதனால் அவரை மும்பை அணி கழட்டிவிட வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.