TNPSC Group 4 Hall Ticket Download : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை நடக்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், சிலர் இதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர், ஆனால் டிஎன்பிஎஸ்சி தளத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அது குறித்த விளக்கத்தை இங்கே பார்க்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் என கூகுளில் தேடுகின்றனர்.
கூகுள் தேடலில் டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் டவுன்லோடு ஆப்சன் காண்பிக்கும். இன்னொரு டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் டவுன்லோடு தளத்தில் சென்றால் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவை கேட்கும். அதனை உள்ளிட்டால் ஹால்டிக்கெட் எல்லாம் டவுன்லோடு ஆகாது. மாறாக டிஎன்பிஎஸ்சி முதன்மை தளத்துக்கு செல்வீர்கள். இதைப் பார்த்து சிலர் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வதில் பிரச்சனை இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தேர்வர்கள், எப்போதும் போல் டிஎன்பிஎஸ்சி தளத்துக்கு சென்று உங்களின் லாகின் ஐடியை கொடுத்து டிஎன்பிஎஸ்சி தளத்தில் ஒருமுறை பதிவு பக்கத்தில் லாகின் செய்யவும். லாகின் செய்யாமல் நேரடியாக ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய முடியாது. லாகின் செய்தபிறகு உங்களின் புரொபைல் பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கே உங்களுடைய டிஎன்பிஎஸ்சி தேர்வு ஹிஸ்டரி மற்றும் ஹால்டிக்கெட் இருக்கும். அந்த ஆப்சனை தேர்வு செய்து கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களுடைய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் முதாலாவதாக இருக்கும். அதில், டவுன்லோடு என்ற ஆப்சனை கிளிக் செய்து உங்களுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது ஒரு சிம்பிளான நடைமுறை தான். ஆனால், ஹால்டிக்கெட் தேடும் தேர்வர்கள் பலரும் கூகுளில் டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் என டைப் செய்து தேடுகிறார்கள். அப்போது, டிஎன்பிஎஸ்சி முதன்மை தளம், ஹால் டிக்கெட் டவுன்லோடு போன்ற லிங்குகள் காண்பிக்கும். நீங்கள் நேரடியாக டிஎன்பிஎஸ்சி முதன்மை தள லிங்கை தேர்வு செய்து, அதில் லாகின் செய்தீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக, லாகின் செய்யாமல் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய முயற்சித்தீர்கள் என்றால் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய முடியாது.
டிஎன்பிஎஸ்சி, வரும் ஜூலை 12 ஆம் தேதி குரூப் தேர்வு நடத்துகிறது. கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட 3935 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடக்கிறது. குறைவான காலிப்பணியிடங்கள் என தேர்வர்கள் நினைக்கின்றனர், ஆனால், தேர்வுக்குப் பிறகு இந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.