மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது | Automobile Tamilan


BE 6 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

முன்பாக BE 6, XEV 9e டாப் வேரியண்ட் Pack Three மட்டுமே பிரத்தியேகமாக 79kWh பேட்டரியை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது Pack Two வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு விலை BE 6 ரூ.23.50 லட்சம் முதல் XEV 9e மாடல் ரூ.26.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் ஜூலை மாத இறுதியில் துவங்கும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.

விலை உடன் கூடுதலாக 7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை வாங்கும் பொழுது ரூ.75,000 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 BE 6 எலக்ட்ரிக் காரில் உள்ள 79kwh பேட்டரி பேக் ஆனது 79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 682 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

XEV 9e காரில் உள்ள 79kwh பேட்டரி பேக் ஆனது பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அதிக பேட்டரி திறன் கொண்ட எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலையில் அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.