அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்க கூடாது: நமது இலக்கு 2026 அல்ல; 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன் 

சென்னை: ‘அ​தி​முக​வுக்கு பாஜக சுமை​யாக இருக்​கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளு​மன்ற தேர்​தல்​தான்’ என பூத் கமிட்டி கூட்​டத்​தில் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

தமிழக பாஜக பூத் கமிட்​டியை வலிமைப்​படுத்​து​வது தொடர்​பாக வாக்​குச்​சாவடி பொறுப்​பாளர்​களுக்​கான பயிலரங்​கம் சென்​னையை அடுத்த காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள ஒரு தனி​யார் பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சிக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை தாங்​கி​னார்.

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், அமைப்பு பொதுச்​செய​லா​ளர் கேசவ விநாயகன், மேலிட பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்​பாளர் சுதாகர் ரெட்​டி, முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா, மகளிர் அணி தேசிய தலை​வர் வானதி சீனி​வாசன், மாநில துணை தலை​வர் கரு.​நாக​ராஜன், பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் உள்பட மூத்த நிர்​வாகி​கள், 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடி பொறுப்​பாளர்​கள் கலந்து கொண்​டனர்.

கூட்​டத்​தில், 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்​கொள்​வது தொடர்​பாக பல்​வேறு ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​டன. அதைத்​தொடர்ந்து மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட வேண்​டும் என்ற நோக்​கத்​தின் அடிப்​படை​யில் பாஜக பூத் கமிட்​டியை வலிமைப்​படுத்​தும் கூட்​டம் நடத்​தப்​பட்​டுள்​ளது. முரு​கர் பக்​தர்​கள் மாநாட்டை இந்து முன்​னணி நடத்​தி​னாலும், அதற்கு சிறப்பு சேர்த்​தது பாஜக​தான். அந்த மாநாட்​டைக் கண்டு திமுக​வுக்கு தூக்​கம் வரவில்​லை. அதனால்தான் இன்று, ஓரணி​யில் தமிழ்​நாடு என திமுக பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறது.

திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்ப வேண்​டும். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி கோட்​டைக்கு வர வேண்​டும். அதற்​கானஅடித்​தளம்தான் இந்த பூத் கமிட்டி கூட்​டம். ஒரு தொகு​திக்கு 300 பூத் இருக்​கும். ஒரு பூத்​துக்கு குறைந்​தது 12 பேரை உறுப்​பினர்​களாகச் சேர்க்க வேண்​டும். அதன்​படி, ஒரு தொகு​திக்கு 3,600 பேரை பூத் உறுப்​பினர்​களாக இணைக்க வேண்​டும். அப்​படி சேர்த்​தால், 2026-ல் உறு​தி​யாக ஆட்சி மாற்​றம் வரும். அதற்​கான வியூ​கங்​களை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பார்த்​துக் கொள்​வார்.

கடந்த நாடாளு​மன்​றத் தேர்​தலில் அதி​முக மற்​றும் பாஜக வாங்​கிய வாக்​கு​களை​யும், திமுக வாங்​கிய வாக்​கு​களை​யும் கூட்​டிப் பார்த்​தால் 24 லட்​சம் வாக்​கு​கள்​தான் வித்​தி​யாசம் இருக்​கிறது. எனவே, ஒரு பூத்​துக்கு 37 வாக்​கு​கள் கூடு​தலாக பெற்​றால், நாம் உறு​தி​யாக 202 தொகு​தி​களில் வெற்றி பெற்று விடலாம். இதை கவனத்​தில் கொண்டு ஒவ்​வொரு​வரும் செயல்​பட்​டால் நிச்​ச​யம் ஆட்சி மாற்​றம் ஏற்​படும். மத்​திய அரசின் திட்​டங்​களை மக்​களிடம் கொண்டு சேர்க்க வேண்​டும். இதில் முன்​னாள் மற்​றும் இன்​னாள் மாவட்ட தலை​வர்​கள் இணைந்து பணி​யாற்ற வேண்​டும். நமது நோக்​கம் 2026 கிடை​யாது. 2029 நாடாளு​மன்​றம்​தான் என்​பதை அனை​வரும் புரிந்​து​கொண்டு செய​லாற்ற வேண்​டும்.

2029 நாடாளு​மன்​றத் தேர்​தலில் தமிழகத்​தில் இருந்து நிறைய எம்​.
பி.க்​கள் பாராளு​மன்​றம் செல்ல வேண்​டும். அதி​முக​வுக்கு பாஜக சுமை​யாக இருக்​கக் கூடாது. நீங்​கள் பலமாக இருந்​தால்​தான் அதி​முக​வினர் உங்​களை வீடு​தேடி வந்து அழைப்​பார்​கள். எனவே, அவ்​வாறு அழைக்​கும் வகை​யில் செல்​வாக்கை வளர்த்​துக் கொள்​ளவேண்​டும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

பாஜக மண்டல மாநாடு​கள்: இதற்​கிடையே, 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு தயா​ராகும் வகை​யில் தமிழக பாஜக சார்​பில் மண்டல மாநாடு​கள் நடத்த திட்​ட​மிட்​டப்​பட்​டுள்​ளது. அந்​தவகை​யில், நெல்​லை​யில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மண்டல மாநாடு நடை​பெறுகிறது. தொடர்ந்​து, மதுரை​யில் செப்​.13, கோவை​யில் அக்​.26, சேலத்​தில் நவ.23, தஞ்​சாவூரில் டிச.21, திரு​வண்​ணா​மலை​யில் 2026 ஜன.4, திரு​வள்​ளூரில்​ ஜன.24-ம்​ தேதி என 7 இடங்​களில்​ மண்​டல ​மா​நாடுகள்​ நடைபெற உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.