அயோத்தி, ராமேஸ்வரம் உட்பட 30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுப்பயணம்: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு

புதுடெல்லி: நாடு முழு​வதும் பல்​வேறு சுற்​றுலாத் திட்​டங்​களை இந்​திய ரயில்வே கேட்​டரிங் மற்​றும் சுற்​றுலா கழகம் (ஐஆர்​சிடிசி) இயக்கி வரு​கிறது. தற்​போது புதி​தாக அயோத்தி ராமர் கோயில் உள்​ளிட்ட 30 இடங்​களை இணைக்​கும் 17 நாள் சுற்​றுலாத் திட்​டத்தை ஐஆர்​சிடிசி அறி​முகம் செய்​துள்​ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்​களை ஐஆர்​சிடிசி இயக்கி வரு​கிறது. தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள இந்த சுற்​றுலாத் திட்​டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயி​லாகும்.

இந்த ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் திட்​டம் வரும் 25-ம் தேதி தொடங்கி 17 நாட்​கள் நடை​பெறும். அயோத்​தி, நந்​தி​கி​ராம், சீதா​மார்​ஹி, ஜனக்​பூர், புக்​சார், வாராணசி, பிர​யாக்​ராஜ், சித்​ரகூட், நாசிக், ஹம்​பி, ராமேஸ்​வரம் உள்​ளிட்ட 30 புனித்​தலங்​களை இந்த சுற்​றுலாத் திட்​டம் இணைக்​கிறது. இறு​தி​யாக இந்த ரயில் டெல்​லியை வந்​தடை​யும்.

இதுகுறித்து ஐஆர்​சிடிசி அதி​காரி​கள் கூறும்​போது, “அயோத்​தி​யில் ராம ஜென்​மபூமி கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, பல்​வேறு துறை​களைச் சேர்ந்த பக்​தர்​கள் மிகுந்த ஆர்​வத்​துடன் அயோத்​திக்கு வரு​கின்​றனர். மேலும், மத மற்​றும் கலாச்​சார சுற்​றுலாத்​துறை மிகப்​பெரிய ஊக்​கத்​தைப் பெற்​றுள்​ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்​குப் பிறகு, இது நாங்​கள் நடத்​தும் 5-வது ராமாயண சுற்​றுப்​பயண​மாகும், மேலும் எங்​கள் முந்​தைய அனைத்து சுற்​றுப்​பயணங்​களும் பயணி​கள் மற்​றும் யாத்​ரீகர்​களிட​மிருந்து ஊக்​கமளிக்​கும் வரவேற்​பைப் பெற்​றுள்​ளன” என்று தெரி​வித்​தனர்.

இந்த சுற்​றுலாத் திட்​டத்​தில் பங்​கேற்​கும் பயணி​கள் 3-வது ஏசி வகுப்​பில் செல்ல ரூ.1,17,975-ம், 2-வது ஏசி வகுப்​பில் செல்ல ரூ.1,66,380-ம், முதல் வகுப்பு ஏசி​யில் செல்ல ரூ.1,79,515-ம் கட்​ட​ண​மாக செலுத்​தவேண்​டும். இந்​தக் கட்​ட​ணத்​தில் ரயில் டிக்​கெட், 3 நட்​சத்​திர ஓட்​டல்​களில் தங்​குதல், 3 வேளை உணவு (சைவம் மட்​டும்), ரயி​லில் இருந்து புனித்​தலம் செல்​வதற்​கான வாகன வசதி, சுற்​றுலாக் காப்​பீடு, ஐஆர்​சிடிசி சேவை​கள் அனைத்​தும் அடங்​கும்.

இந்த ரயில் டெல்லி சப்​தார்​ஜங் ரயில் நிலை​யத்​தில் இருந்து ஜூலை 25-ம் தேதி புறப்​படும். இந்​தப் பயணத்​துக்கு நவீன வசதி​கள் அடங்​கிய பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்​றுலா ரயில் பயன்​படுத்​தப்​படும். முதலா​வ​தாக அயோத்தி ராமர் கோயில் செல்​லும் இந்த ரயில் அதன் பின்​னர் மற்ற புனிதத் தலங்​களை அடை​யும். 17 நாள் சுற்​றுலா முடிந்த பின்​னர் இறு​தி​யாக டெல்​லிக்கு இந்த ரயில் வந்​தடை​யும்​ என்​று ஐஆர்​சிடிசி அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.