திருவனந்தபுரம்,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எப்-35பி போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்காக இங்கிலாந்தில் இருந்து 2 மெக்கானிக்குகள், 2 பைலட்டுகள் வரவழைக்கப்பட்டு விமானத்தை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சுமார் 25 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறையும் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வியடைந்தால், விமானத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து சரக்கு விமானத்தில் இங்கிலாந்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.