TNPL: முதல்முறையாக கோப்பையை வென்ற திருப்பூர் அணி… அடங்கியது திண்டுக்கல்!

TNPL 2025, Idream Tiruppur Tamizhans Champions: டி20 லீக் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5ஆம் தேதி கோவையில் தொடங்கியது.

TNPL 2025: 4 நகரங்களில் லீக் சுற்று போட்டிகள்

டிஎன்பிஎல் தொடரில் கடந்த 2024ஆம் ஆண்டு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை லைகா கிங்ஸ் அணிகளுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம்  ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீச்செம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

முதலில் நடந்த லீக் சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 போட்டியை மோதின. இந்த லீக் சுற்று போட்டிகள் கோவையில் தொடங்கி சேலம், திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் வரை நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை சேப்பாக் சூப்பர் கிங்ஸ், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய 4 அணிகள் தகுதிபெற்றன. குவாலிபயர் 1 போட்டியில் சேப்பாக் அணியை வென்று சாய் கிஷோர் (Sai Kishore) திருப்பூர் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்றது. 

TNPL 2025: அஸ்வின் vs சாய் கிஷார்

எலிமினேட்டரில் திருச்சியை அடித்து, குவாலிபயர் 2 போட்டியில் சேப்பாக் அணியை அடித்து திண்டுக்கல் அணி பலமான அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கடந்தாண்டு சாம்பியன் என்பதால் கோப்பையை தக்கவைக்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார். ஆனால் அவர் டாஸை வென்று கோட்டைவிட்டார் எனலாம். அஸ்வின் டாஸை வென்று பந்துவீச்சு எடுத்தார்.

TNPL 2025: மிரட்டிய திருப்பூர் பேட்டிங்

இறுதிப்போட்டியில் திருப்பூர் அணியின் ஓப்பனிங் ஜோடி முதல் 10 ஓவர்கள் ஆட்டமிழக்கவே இல்லை. இந்த ஜோடி 121 ரன்களை குவித்த போது, 11வது ஓவரில் அமித் சாத்விக் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்திருந்தார். கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு ஓப்பனர் ரஹேஜா 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் 77 ரன்களை அடித்து மிரட்டினார். முகமது அலி 23, சசிதேவ் 20, அனோவங்கர் 25 அடித்தனர். இதனால், திருப்பூர் அணி 20 ஓவர்களில் 220 ரன்களை எடுத்தது, 5 விக்கெட்டுகளையே எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் கார்த்திக் சரண் 2, புவனேஷ்வர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றிறனர்.

TNPL 2025: மொத்தமாக சொதப்பிய திண்டுக்கல் டிராகன்ஸ்

தொடர்ந்து இறுதிப்போட்டியில் இமலாய வெற்றியுடன் வந்த அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு இந்தாண்டு கோப்பையை தக்கவைக்க இயலவில்லை. 14.4 ஓவர்களில 102 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சிவம் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. திருப்பூர் பந்துவீச்சில் இசக்கிமுத்து, சிலம்பரசன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், நடராஜன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 118 வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது. 

Maiden title for iDream Tiruppur Tamizhans!#IDTTvDD #TNPL #TNPL2025 #TNPLFinal #NammaOoruNammaGethu pic.twitter.com/7QZ3Qc9Z4h

— TNPL (@TNPremierLeague) July 6, 2025

இதன்மூலம், முதல்முறையாக திருப்பூர் அணி டிஎன்பிஎல் கோப்பையை வென்றுள்ளது. போட்டியிலும் தொடரிலும் அதிக ரன்களை அடித்த திருப்பூர் அணியின் துஷார் ரஹேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். இவர் இந்த தொடரில் 9 இன்னிங்ஸில் 488 ரன்களை அடித்துள்ளார். 61 சராசரி, 185.55 ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.