இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: எந்த சேனலில் நேரலையாக பார்க்கலாம்?

India vs England 3rd Test 2025: எட்ஜ்பஸ்டன் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு சுப்மன் கில் தலைமையிலான இந்தியா, பென் ஸ்டோக்ஸின் இங்கிலாந்தை லார்ட்ஸில் எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் ஆடாமல் ஓய்வில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை லார்ட்ஸ் போட்டிக்காக மீண்டும் அணியில் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியும் பல மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோஃப்ரா ஆர்சர் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போட்டியை லைவ்வாக எங்கு பார்க்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட் மேட்ச்: எங்கே பார்க்கலாம்?

இந்தியாவில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி Sony Sports Network-ல் ஒளிபரப்பப்படும். மேலும், JioHotstar ஆப் மற்றும் வெப்சைட்டில் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும்.

ஆங்கிலம்: Sony Sports Ten 1 மற்றும் Sony Sports Ten 5

இந்தி: Sony Sports Ten 3

தமிழ் மற்றும் தெலுங்கு : Sony Sports Ten 4

இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட் 2025: தேதி, நேரம் மற்றும் இடம்

இடம்: லார்ட்ஸ், இங்கிலாந்து

தேதி: வியாழன், ஜூலை 10 முதல்

டாஸ் நேரம்: முதல் நாள் மதியம் 3:00 PM IST

பந்துவீச்சு தொடக்கம்: 3:30 PM IST (முதல் நாள்),

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்தியா: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், KL ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிரிஸ் வோக்ஸ், கஸ் ஆட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்சர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.