சென்னை: ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டின் உள்ள 35அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசின் பதிலைத்தொடர்ந்து நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கி உள்ளது. அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நான்கு மாதங்களுக்குள் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிற குறைபாடு களை சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 35 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய […]
