திருவாரூர்: திருவாரூர் கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று காலை வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொண்டார். இதை தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அரசு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள […]
