IND vs ENG: லார்ட்ஸ் மைதானத்திற்குள் கவாஸ்கரை அனுமதிக்க மறுப்பா? நடந்தது என்ன?

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் இந்தியாவுக்காக பல சாதனைகளை கிரிக்கெட்டில் படைத்துள்ளார். இச்சூழலில் அவர் இன்று அவர் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கவாஸ்கரை உள்ளே அனுமதிக்காத சம்பவத்தை அவரது நண்பர் பகிர்ந்துள்ளார். 

கவாஸ்கரின் பிறந்த நாள் விழா ஒன்று மும்பையில் நடைபெற்றது. இதில் கவாஸ்கரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவருடன் விளையாடிய முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போதுதான், யஜுர் விந்தர சிங் என்ற முன்னாள் வீரர் கவாஸ்கரை லார்ட்ஸ் மைதானத்திற்குள் அனுமதிக்காது குறித்து பேசி இருக்கின்றார். அவர் கூறியதாவது, 1979ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெற இருந்தது. இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்தவர் கவாஸ்கர். 

அந்த போட்டியை பார்ப்பதற்கு கவாஸ்கரின் நண்பர்கள் சில வந்திருந்தனர். அப்போது தன்னுடைய நண்பர்களுக்கு பாஸ் வழங்க கவாஸ்கர் மைதானத்தை விட்டு வெளியே சென்றிருந்தார். அவர் வெறும் காலணி மட்டுமே அணிந்திருந்தார். நண்பர்களுக்கு பாஸ் வழங்கிவிட்டு மீண்டும் அவர் மைதானத்திற்குள் வரும்போது மைதானத்தில் பாதுகாவலர் அவரை அனுமதிக்கவில்லை. அங்கிருந்த பலரும் இவர்தான் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் என கூறினார். இருப்பினும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிப்பேன் என பாதுகாவலர் கூறிவிட்டார். 

அந்த பாதுகாவலருக்கு சுனில் கவாஸ்கர் யார் என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனாலும் வேண்டுமென்றே அவர் உள்ளே விட மறுத்துவிட்டார். இதையடுத்து நாங்கள் அணியின் மேனேஜரிடம் கூறி பாதுகாவலரிடம் பேச சொன்னோம். பின்னர் மேனேஜர் கவாஸ்கரின் பாஸை எடுத்து வந்த பிறகு தான் கவாஸ்கர் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என யஜுர் விந்தர சிங் கூறினார். இதேபோல் மற்றொரு சம்பவத்தையும் யஜுர் விந்தர சிங் நினைவு கூர்ந்தார். 

நாங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும். அப்போட்டியில் டிக்கி பேர்ட் அம்பயராக இருந்தார். சுனில் கவாஸ்கர் ஒரு அசிங்கமான மாஸ்கை அணிந்திருந்தார். அப்போது அம்பயர் டிக்கி பேர்ட், நீங்கள் அணிந்திருக்கும் மாஸ்க்கால் கவன சிதறல் ஏற்படுகிறது, நீங்கள் அதை நீக்குங்கள் என கூறினார். அதற்கு கவாஸ்கர் நான் இரண்டாவது ஸ்ப்பில்தான் (பேட்ஸ்மேனுக்கு பின்னால்) நிற்கிறேன்.அதே சமயம் பேட்ஸ்மேனின் வேலை பாலை பார்ப்பதுதான் என பதிலளித்தார். உடனே நடுவர் நீங்கள் அணிந்திருக்கும் மாஸ்க் என்னுடைய கவனத்தை சிதறடிக்கிறது. அதை எடுங்கள் என கூறினார் என்றார். 

சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்பவர். அவர் இந்தியாவுக்காக எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். அவர் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 10,122 ரன்களை குவித்து 51.12 சராசரியுடன் உள்ளார். அதேபோல் 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களை குவித்துள்ளார். மொத்தமாக அவரது கிரிக்கெட் கரியரில் 35 சதங்களையும் 77 அரைசதங்களையும் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிங்க: இந்த வீரர் விளையாடினால்… இங்கிலாந்து அணி சுருண்டுவிடும்… அவரை சேர்ப்பாரா சுப்மான் கில்? 

மேலும் படிங்க: “என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்”.. ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் எதிர் புகார்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.