ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு | Automobile Tamilan


propel ev dump truck

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தை PM e-Drive என்ற பெயரில் செயற்படுத்தி வரும் நிலையில் 3.5டன் முதல் 55டன் வரையிலான எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களுக்கான மானியத்தை இந்திய அரசின் கனரக தொழில்கள்  மற்றும் எஃகு அமைச்சர் திரு எச்.டி குமாரசாமி அறிவித்துள்ளார்.

N2 வாகனங்கள் என்பது 3.5 டன்களுக்கு மேல் ஆனால் 12 டன்களுக்கு மிகாமல் மொத்த வாகன எடை (GVW) கொண்ட லாரிகளுக்கான பிரிவாகும், மேலும் N3 என்பது 12 டன்களுக்கு மேல் ஆனால் 55 டன்களுக்கு மிகாமல் GVW கொண்ட லாரிகளைக் குறிக்கிறது.

N3 பிரிவில் உள்ள ஆர்டிகுலேட்டட் வாகனங்களுக்கு, ஊக்கத்தொகைகள் புல்லர் டிராக்டருக்கு மட்டுமே பொருந்தும்.

1கிலோவாட் பேட்டரிக்கு 5,000 அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தொழிற்சாலை விலையில் 10% வரை மானியம் கிடைக்கும்.

PM E-Drive Scheme for E-Trucks

  • 3.5 முதல் 7.5 டன் வரை எடையுள்ள N2 மின்சார லாரிகள் ரூபாய் 2.70 லட்சம் வரை கிடைக்கும்.
  • அதே நேரத்தில் 7.5 முதல் 12 டன் வரை எடையுள்ள லாரிகள் ரூபாய் 3.60 லட்சம் வரை பெறலாம்.
  • N3 வகை வாகனங்களுக்கு, 12 முதல் 18.5 டன் வரை எடையுள்ள லாரிகளுக்கு ரூபாய் 7.80 லட்சம் வரை பெற முடியும்.
  • 18.5 முதல் 35 டன் வரை எடையுள்ள லாரிகளுக்கு ரூ. 9.60 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
  • 35 டன்களுக்கு மேல் ஆனால் 55 டன்களுக்கு மிகாமல் உள்ள மின் டிரக்குகளுக்கு ரூபாய் 9.3 லட்சம் வரை வழங்கப்படும்.

ஒதுக்கப்பட்டுள்ள மானியத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 5600 டிரக்குகளக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். கூடுதலாக, டெல்லிக்கு பிரத்தியேகமாக ₹100 கோடி செலவில் சுமார் 1,100 மின்-டிரக்குகளுக்கு ஒதுக்கியுள்ளது. ஆக மொத்தமாக மானியம் ₹10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.