நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவ​பாடா மாவட்​டம் சிகா​பாஹல் கிராமத்​தைச் சேர்ந்​தவர் 95 வயது மூதாட்டி மங்​கல்​பாரி மஹா​ரா. தள்​ளாத வயதில் இவரால் நடப்​ப​தற்கு முடி​யாத நிலை இருந்​தது. இந்​நிலை​யில் இவரது வீட்​டின் அருகே இருந்த தெரு ​நாய் ஒன்​று, மூதாட்டி மஹா​ராவை கடித்​தது. இதற்​காக, மூதாட்​டிக்கு உள்​ளூர் ஆரம்ப சுகா​தார மையத்​தில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ஆனாலும், நாய் கடித்​துள்​ள​தால் ரேபிஸ் தடுப்​பூசி செலுத்த வேண்​டும். ஆனால் ஆரம்ப சுகா​தார மையத்​தில் தடுப்​பூசி இல்​லாத​தால் வெளியூர் சென்று செலுத்​திக் கொள்​ளு​மாறு சுகா​தார மைய அதி​காரி தெரி​வித்​தார்.

இதனால் மஹா​ரா, தடுப்​பூசி போடு​வதற்​காக தனது கிராமத்​துக்கு அரு​கிலுள்ள சினாப்​பள்ளி சமூக சுகா​தார மையத்​துக்கு செல்ல வேண்டி இருந்​தது. அந்த நேரத்​தில் அந்த மாவட்ட டிரைவர்​கள் சங்​கத்​தினர் ஸ்டிரைக் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தனர். அதனால் அவருக்கு வாக​னங்​கள் கிடைக்​க​வில்​லை. இதையடுத்து 10 கிலோமீட்​டருக்​கும் அதி​க​மான தூரத்​தில் அமைந்​துள்ள சினாப்​பள்​ளிக்​குச் மஹாரா கால்​நடை​யாகவே புறப்​பட்​டார். தள்​ளாத வயதில் மிக​வும் சிரமத்​துக்கு இடையே அவர் 10 கிலோமீட்​டர் தூரம் வரை நடந்தே சென்​றுள்​ளார்.

நாய் கடித்த வலி, வெயில் போன்​றவற்​றால் அவர் நடப்​ப​தற்கு மிக​வும் சிரமப்​பட்​டார். இடை​யில் பிரச்​சினை​கள் இருந்​த​போதும் மனம் தளராமல் நடந்து சென்று சிகிச்சை மையத்தை அடைந்​தார்.அங்கு தடுப்​பூசி போட்ட பிறகு, அவர் கிராமத்​துக்கு 10 கிலோமீட்​டர் வரை நடந்தே வீட்​டுக்​குத் திரும்​பி​னார். அவருக்கு துணை​யாக அவரது மகன் குருதேவ் மஹா​ரா​வும் உடன் சென்​றார்.

மூதாட்டி மஹா​ரா, 20 கிலோமீட்​டர் தூரத்​துக்கு நடந்து சென்ற சம்​பவம் அப்​பகு​தி​யில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேலும், அவர் நடந்து சென்ற வீடியோ, புகைப்​படங்​கள் இணை​யத்​தில் வைரலாகி வரு​கின்​றன. இதுகுறித்து சினாப்​பள்ளி ஒன்​றிய வளர்ச்சி அதி​காரி (பிடிஓ) கர்மி ஓரம் கூறும்​போது, “இந்த சம்​பவம் குறித்து நான் செய்​தி​கள் வாயி​லாக அறிந்​து​கொண்​டேன். அந்த மூதாட்​டிக்​காக யாராவது ஒரு​வர் வாக​னம் ஏற்​பாடு செய்து கொடுத்​திருக்​கலாம். ஸ்டிரைக் நடந்​த​தால் அவருக்கு வாக​னம் ஏற்​பாடு செய்ய முடிய​வில்லை என்று தெரி​கிறது. இதுகுறித்து விசா​ரிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்’’ என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.