வரும் 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் சேர்த்துள்ளனர். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகழ்ச்சி தரும் விதமாக உள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான போட்டி அட்டவணை மற்றும் மைதான குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
போட்டி நடைபெறும் தேதி மற்றும் நேரம்
அதன்படி, 2028 ஜூலை 12ஆம் தொடங்குகி ஜூலை 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கங்களுக்கான போட்டி ஜூலை 19 மற்றும் ஜூலை 29ஆம் தேதி நடைபெறுகிறது. பொரும்பாலான நாட்களில் இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி, காலை 9 மணிக்கும் 2வது போட்டி மாலை 6.30 மணிக்கும் தொடங்கும். இந்த நேரப்படி முறையே, இரவு 9.30 மணி மற்றும் காலை 7 மணி மணி ஆகும்.
மைதானம்
போட்டிகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும். எந்த அடிப்படையில், அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படும் என்பதை ஐசிசி முடிவு செய்யும்.
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
கிரிக்கெட் கடைசியாக 1900ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதையடுத்து சுமார் 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. 1900ஆம் ஆண்டில், கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே இடம் பெறிருந்தது. தற்போது கிரிக்கெட் முக்கிய அணிகளாக இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியை மேலும் உறுதி செய்கிறது. முன்னதாக 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் அறிமுகமானது. மேலும், 2010, 2014 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் ஆடவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: இந்த வீரருக்கு பதிலாக இவரை இறக்குங்க.. ரவி சாஸ்திரி!
மேலும் படிங்க: IND vs ENG: முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு?