இனி இந்த வீரர் வேண்டாம்… தொடரை வெல்ல இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!

India vs England 4th Test Playing XI Prediction: இங்கிலாந்து  – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், சுமார் ஒரு மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்து வருகிறது எனலாம். நவீன கால டெஸ்ட் கிரிக்கெட் எந்தளவிற்கு அதிக சுவாரஸ்யத்தை அளிக்கும் என்பதற்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானது எனலாம்.

IND vs ENG: இதுவரை நடந்தவை…!

ஹெடிங்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெரும்பான்மையான நேரங்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை தவறவிட்டதால் அந்த போட்டியில் வெற்றியும் தவறிப்போனது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து எழுந்திருக்கவே விடாமல் அடித்ததால் எளிதான வெற்றியும் கிடைத்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி கடைசி வரை போராடி 22 ரன்களில் தோற்றது.

#TeamIndia meets His Majesty in London!

P.S. Idris Elba stopped b@RoyalFamily pic.twitter.com/D8CWbPh3sn

— BCCI (@BCCI) July 16, 2025

IND vs ENG: அடுத்தது என்ன?

இதனால், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டியும், ஜூலை 31ஆம் தேதி கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த இரண்டிலும் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை கைப்பற்ற முடியும். இதனால் இந்திய அணி கடைசி 2 போட்டிகளையும் வெல்ல ஒரு பார்முலாவை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு காம்பினேஷனில் சில மாற்றங்களை செய்தாக வேண்டும்.

A determined and well fought innings

Took #TeamIndia close

Scorecard  https://t.co/X4xIDiSmBg#ENGvIND | @imjadeja pic.twitter.com/jGpfgHAeNM

— BCCI (@BCCI) July 14, 2025

IND vs ENG: கருண் நாயருக்கு பதில் யார்?

கருண் நாயருக்கு மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தாகவிட்டது. இந்த தொடருக்கு முன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்களை அடித்திருந்த கருண் நாயர், இந்த தொடரில் விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 0&20, 31&26, 40&14 என மொத்தமே 131 ரன்களையே அடித்திருக்கிறார். சராசரி 21.83 ஆகும். முதல் போட்டியில் நம்பர் 6 இடத்திலும், அடுத்த 2 போட்டிகளில் நம்பர் 3 இடத்திலும் விளையாடியிருந்தார். இனி இவருக்கு அணியில் வாய்ப்பளிப்பது கடினம். இவர் ரன் அடிக்காவிட்டாலும் ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைக்கக் கூட உதவிடவில்லை என்பதாலேயே இவருக்கு பதில் சாய் சுதர்சன் அல்லது அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பளிக்கலாம். 

IND vs ENG: நம்பர் 3இல் நிதான வீரர் தேவை…

இன்னும் அடுத்த போட்டிக்கு ஒரு வார காலம் இருக்கிறது. இதனால், நம்பர் 3 இடத்தில் யாரை இறக்கினால் புஜாரா போன்று ஒரு நீண்ட இன்னிங்ஸை கொடுக்க முடியும் என்பதை இந்திய அணி உறுதிசெய்ய வேண்டும். கேஎல் ராகுல், சுப்மான் கில் போன்று நம்பர் 3 வீரரும் பொறுமையாக விளையாடினால் டாப் ஆர்டரில் இருந்து அதிக ரன்களை எதிர்பார்க்கலாம். அதிரடிக்கு ஜெய்ஸ்வால் மட்டும் போதும்.

IND vs ENG: ரிஷப் பண்ட் விளையாடுவாரா?

மிடில் ஆர்டரை பொறுத்தவரை எவ்வித மாற்றமும் தேவையற்றது. ஆனால் ரிஷப் பண்ட் காயம்தான் பெரிய கேள்விக்குறியாக அமைந்துவிட்டது. அவர் அடுத்த போட்டிக்கு களமிறங்காதபட்சத்தில் துருவ் ஜூரேல் அணிக்குள் வருவார். மற்றபடி பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை.

IND vs ENG: ஜஸ்பிரித் பும்ரா இருப்பாரா…?

ஆகாஷ் தீப் – முகமது சிராஜ் ஜோடி தொடரும். பும்ரா 4வது போட்டியை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடவிட்டால் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் காம்பினேஷனில் கச்சிதமாக இருப்பதால் அவர்களும் 4வது போட்டியில் தொடர்வார்கள் எனலாம். இதனால் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. 

IND vs ENG: இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு)

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன்/சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட்/துருவ் ஜூரேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா/அர்ஷ்தீப் சிங்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.