கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) சார்பில் நடைபெறும் மகாராஜா டிராபி T20 டிராபி ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் UNSOLD ஆகி உள்ளார். இது ராகுல் ட்ராவிட்டிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மறுபுறம் இந்திய அணி வீரர் தேவதத் படிக்கல், ஹப்ளி டைகர்ஸ் அணியால் ரூ.13.2 லட்சத்திற்கு வாங்கப்பட்டு, ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்த ஏலம் ஆகஸ்ட் 11 முதல் 27 வரை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள மகாராஜா டிராபி T20 தொடருக்காக நடத்தப்பட்டது. சமித் டிராவிட் ஏலத்தில் விற்பனையாகாமல் போனது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிங்க: பஞ்சாப் கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
Rahul Dravid’s son, Samit Dravid, goes unsold in the KSCA T20 League auction. pic.twitter.com/Z6kIqrUVuQ
— Vipin Tiwari (@Vipintiwari952) July 15, 2025
சமித் டிராவிடின் ஏமாற்றம்
19 வயதான சமித் டிராவிட் கடந்த 2024 மகாராஜா டிராபி தொடரில் மைசூரு வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால், 7 போட்டிகளில் விளையாடி 82 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 11.71 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 113.89 ஆக இருந்தது. மேலும் அவரது அதிகபட்ச ஸ்கோர் 33 ரன்கள் தான். சமித் டிராவிட் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும், கடந்த சீசனில் இவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை, மேலும் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்பு கடந்த ஆண்டு நடைபெற்ற கூச் பிஹார் டிராபியில் 362 ரன்களும் 16 விக்கெட்டுகளும் எடுத்து கவனம் ஈர்த்திருந்தார். இருந்தாலும் டி20 வடிவத்தில் அவரது மோசமான பார்ம் காரணமாக ஏலத்தில் அவரை யாரும் எடுக்கவில்லை. சமித் டிராவிட் முழங்கால் காயம் காரணமாக 2024ல் இந்திய அண்டர்-19 அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாக முடியவில்லை.
தேவதத் படிக்கல் முன்னிலை
இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனான தேவதத் படிக்கல் ரூ.13.2 லட்சத்திற்கு ஹப்ளி டைகர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார். மேலும் அபினவ் மனோகர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் தலா ரூ.12.2 லட்சத்திற்கு ஹப்ளி டைகர்ஸ் மற்றும் மைசூரு வாரியர்ஸ் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களில், வித்வத் கவேரப்பா (ரூ.10.8 லட்சம்) மற்றும் வித்யாதர் பாட்டீல் (ரூ.8.3 லட்சம்) ஆகியோர் பெரிய தொகைகளுக்கு வாங்கப்பட்டனர். மங்களூரு டிராகன்ஸ் அணி, அனுபவமிக்க ஷ்ரேயாஸ் கோபாலை ரூ.8.6 லட்சத்திற்கு வாங்கியது, மேலும் இளம் ஆல்ரவுண்டர் அனீஷ்வர் கவுதம் (ரூ.8.2 லட்சம்) மற்றொரு பெரிய தொகைக்கு ஏலம் போனார்.
ஏலத்தில் UNSOLD ஆனாலும் சமித் டிராவிட் இளம் வீரர் என்பதால் எதிர்காலத்தில் நல்ல பேட்ஸ்மேனாக வருவார் என்று பலரும் நம்பிக்கை அளித்துள்ளனர். கூச் பிஹார் டிராபியில் அவரது சிறப்பான ஆட்டம், அவரது திறமையை நிரூபித்துள்ளது. மைசூரு வாரியர்ஸ் அணி கருண் நாயர் தலைமையில், பிரசித் கிருஷ்ணா, கே.கவுதம் போன்ற முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது, ஆனால் சமித்தை மீண்டும் தேர்வு செய்யவில்லை. ஆகஸ்ட் 11 முதல் தொடங்கவுள்ள மகாராஜா டிராபி T20 தொடர், புதிய திறமைகளை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: IND vs ENG: முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு?