இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள முரட்டுத்தனமான தோற்றத்துடன் கூடிய ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் பெற்ற பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபேவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
- புதிய BMW 218 M Sport: ₹ 46,90,000
- புதிய BMW 218 M Sport Pro: ₹ 48,90,000
இந்த காரில் புரூக்ளின் கிரே மெட்டாலிக், போர்டிமாவ் ப்ளூ மெட்டாலிக், பிளாக் சஃபையர் மெட்டாலிக் மற்றும் ஆல்பைன் ஒயிட் ஆகிய 5 நிறங்களை கொண்டுள்ளது. இன்டீரியரில் அப்ஹோல்ஸ்டரி விருப்பங்களில் வெகான்சா பெர்ஃபோரேட்டட் ‘மோச்சா’ மற்றும் வெகான்சா பெர்ஃபோரேட்டட் ‘ஓய்ஸ்டர்’ இரண்டு விதமாக உள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றுள்ள 2 சீரிஸ் கிரான் கூபே பவர் 156 hp மற்றும் டார்க் 230Nm வரை வெளிப்படுதுகின்ற நிலையில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மேலும் இந்த கூபே கார் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது.
இன்டீரியரில் 10.7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை மற்றும் 10.24-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ள நிலையில், பனரோமிக் சன்ரூஃப் என பலவற்றை பெற்று கூரையில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்கவோ அல்லது பயணிகளின் வீடியோக்களை பதிவு செய்யவோ முடியும், இதை ஸ்மார்ட்போனுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் உடன் மிக சிறப்பான கோனத்தில் அமைந்துள்ள பாரம்பரிய பிஎம்டபிள்யூ கிரில் கொண்டு 18 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.