பாக்தாத்,
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் அல் குட் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மாடிகள் கொண்ட அந்த வணிக வளாக கட்டிடத்தில் தீ பிடித்ததால், வணிக வளாகத்திற்கு வந்து இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில், 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை.
Related Tags :