மும்பை,
இந்திய கிரிக்கெட் வீரரான ஜிதேஷ் ஷர்மா உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் ஜிதேஷ் ஷர்மா எதிர்வரும் ரஞ்சி சீசனில் விதர்பா அணியில் இருந்து விலகி பரோடா அணிக்காக விளையாட உள்ளார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அத்துடன் அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
Related Tags :