இந்தியாவுக்கு தோல்வி நிச்சயம்; இந்த வீரர் இல்லாவிட்டால்… கம்பீருக்கு துணிச்சல் இருக்கா?

India vs England: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. 

முதல் 3 போட்டிகளின் நிலவரப்படி இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.

India vs England: இந்திய அணியின் சிறு சிறு தவறுகள் 

இங்கிலாந்து அணியும் (Team England), இந்திய அணியும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்ற ரீதியில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் இருந்தாலும் கூட இந்திய அணிதான் கடந்த மூன்று போட்டிகளிலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. எனினும் சிறு சிறு தவறுகள் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தரவில்லை.

India vs England: இந்திய அணியின் மீதான கேள்விகள்

எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற நிச்சயம் சரியான காம்பினேஷனை அமைக்க வேண்டும். கௌதம் கம்பீர் – சுப்மான் கில் ஆகியோர் இதற்காக பிளேயிங் லெவனில் (Team India Playing XI Prediction) சரியான மாற்றத்தை செய்தாக வேண்டும் எனலாம். தற்போதைய பிளேயிங் லெவனில் கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி ரிஷப் பண்டின் காயம் குறித்தும், ஜஸ்பிரித் பும்ராவின் பிட்னஸ் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன.

India vs England: இந்திய அணியின் தற்போதைய காம்பினேஷன்

இந்நிலையில், இந்திய அணியின் (Tean India) மூத்த பேட்டரான அஜிங்கயா ரஹானே கம்பீருக்கும், சுப்மான் கில்லுக்கும் ஒரு புதிய ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது தற்போதைய இந்திய அணியின் காம்பினேஷனில் ஐந்து பிரீமியம் பேட்டர்கள், 2 சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், 3 பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி 3 ஆல்ரவுண்டர்களை கொண்டு விளையாடி வருகிறது. காரணம், நம்பர் 8 வரை பேட்டிங் வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக…

India vs England: ரஹானே சொல்லும் ஐடியா என்ன?

அந்த வகையில், அஜிங்கயா ரஹானே (Ajinkya Rahane) அவரது யூ-ட்யூப் சேனலில், “(டெஸ்ட் போட்டியின்) 4ஆம் மற்றும் 5ஆம் நாளில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ரன்கள் எடுப்பது எளிதல்ல. இங்கிலாந்தும் மிக சிறப்பாகவே பந்து வீசியது. ஆனால் முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை அடிப்பதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டதாக நினைக்கிறேன். 

மேலும், வரும் போட்டிகளில் இந்தியா ஒரு கூடுதல் பந்துவீச்சாளரைச் சேர்த்து விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு டெஸ்ட் தொடரை வெல்லலாம்” என பேசியிருக்கிறார்.

India vs England: யாருக்கு பதில் யார்?

எனவே, வாஷிங்டன் சுந்தர் அல்லது நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதில் குல்தீப் யாதவை (Kuldeep Yadav) பிளேயிங் லெவனில் இந்திய அணி சேர்க்கும் என கூறப்படுகிறது. கருண் நாயருக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் 4வது டெஸ்டில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். 

குல்தீப் யாதவ் விளையாடுவது நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் அழுத்தத்தை தரும். அதுவும் 4-5 நாள்களில்… எனவே, ஒரு ஆல்-ரவுண்டருக்கு பதில் குல்தீப் யாதவை கண்டிப்பாக விளையாட வைக்க வேண்டும். இல்லையெனில், வெற்றி பெறுவது கடினம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.