ஜாகுவார் லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி அடிப்படையில் ஆட்டோபையோகிராபி விற்பனைக்கு ரூபாய் 86.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோபையோகிராபி மாடலில் பெட்ரோல் P250 ஆனது பவர் 250hp , 365Nm 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள நிலையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் கொண்டு 0-100kph வேகம் முறையே 7.5 வினாடிகள் எட்டுகின்றது.
அடுத்து, 2.0 லிட்டர் வேலார் டீசல் D200 எஞ்சின் மைல்டு ஹைபிரிட் பெற்று 204hp மற்றும் 430Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 0-100kph வேகம் எட்ட 8.3 வினாடிகளில் எட்டுகின்ற நிலையில் தானியங்கி டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் உள்ளது.
பானட் மற்றும் டெயில்கேட்டில் ‘ரேஞ்ச் ரோவர்’ என எழுதப்பட்டு எல்இடி ஹெட்லேம்ப் கொண்டு மிகவும் பிரத்தியேகமான வெள்ளை, ப்ளூ, கிரே மற்றும் கோல்டு நிறத்துடன் புதிய சாடின் டார்க் கிரே நிறத்தை பெற்ற 20-இன்ச் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது.
வேலார் ஆட்டோபயோகிராபியில் அப்ஹோல்ஸ்டரிக்கு பிரத்யேக கிளவுட்/எபோனி, டீப் கார்னெட்/எபோனி மற்றும் கேரவே/எபோனி என மூன்று விதமாக பெற்று வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 11.4-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 4-சோன் ஏசி, ஏர் ப்யூரிஃபையர் மற்றும் மெரிடியன் ஆடியோ சிஸ்டத்துடன் 3D சரவுண்ட் சவுண்ட் பெறலாம்.