பர்மிங்காம்,
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, கிறிஸ் கெயில் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. மாலை 5 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. மழை காரணமாக இந்த போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.