சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் கோவை திருப்பூர் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இவ்விரு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வதுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இருந்து தனது கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் கல்லூரி […]
