சீட் பெல்ட் கோளாறால் திரும்ப அழைக்கப்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்கள் | Automobile Tamilan

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள SAVWIPL நிறுவன ஸ்கோடா கைலாக், குஷாக், ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், டைகன் ஆகியவற்றில் 1821 கார்களை பின்புற சீட்பெல்ட் கோளாறினால் இரண்டாவது முறையாக நடப்பு ஆண்டில் திரும்ப அழைக்கப்படுகின்றது.

குறிப்பாக இரு நிறுவனத்தின் மாடல்களில் உள்ள பின்புற இருக்கை பெல்ட் அசெம்பிளியின் உலோகத் தளத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால் டிசம்பர் 2021 முதல் மே 2025 வரை தயாரிக்கப்பட்டுள்ள 961 ஃபோக்ஸ்வேகன் நிறுவன விர்டஸ் மற்றும் டைகன் மாடலிலும், ஸ்கோடாவின் கைலாக், குஷாக், ஸ்லாவியா ஆகியவற்றில் 860 கார்களும் பாதிக்கப்பட்டுள்ள சீட்பெல்ட்டை இலவசமாக மாற்றித் தர திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு உங்கள் வாகனத்தின் Vehicle Identification Number or VIN அந்நிறுவனங்களின் இணையதளத்தில் சோதனை செய்து கொள்ளலாம், மேலும் டீலர்கள் உங்களை விரைவில் அழைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.