சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப்4 விடைத்தாள் பிரிக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வுக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வினாத்தாள், விடைத்தாள் அனுப்பும் நடைமுறை மாற்றம் செய்யப்படுவதாகவும், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு தொடர்பான சர்ச்சை குறித்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். “சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லை. குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14 ஆம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாள்களை தேர்வு […]
