Ind vs Eng 4th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி 2 போட்டியில் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக வரும் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வெல்ல வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது.
அடுத்த இரண்டு போட்டிகளை வென்றாக வேண்டும்
மறுபக்கம் இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை கைபற்ற வேண்டும் என தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்க உள்ளது. இதனிடையே இத்தொடரில் இருந்து இந்திய வீரர் நிதீஷ் குமார் விலகி உள்ளார். மறுபுறம் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங்கும் விலகி உள்ளனர்.
அதேபோல் ரிஷப் பண்ட்டிற்கு கடந்த போட்டியில் கை விரலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் பேட்டிங் செய்தார். விக்கெட் கீப்பிங் அவருக்கு பதிலாக துரூவ் ஜுரேல் செய்தார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் 11 மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அணி குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
கருண் நாயர் விளையாடுவார்
அவர் பேசுகையில், இளம் வீரர் அன்ஷுல் கம்போஜின் திறமை குறித்து நாங்கள் அறிவோம். அவரால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும். அவர் நாளை தொடங்க உள்ள போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அன்ஷுல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா இருவரில் ஒருவர் நிச்சயம் விளையாடுவர். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவே களம் இறங்குவார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
கருண் நாயரை பொறுத்தவரையில், அவர் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார். முதல் போட்டியில் அவரின் பேட்டிங் வரிசையில் அவர் ஆடவில்லை. அவர் ஒரு அரைசதம் அடித்தால் போது, அவர் ஃபார்மிற்கு திரும்பிவிடுவார். அதனை நாளை செய்வார் என நம்புகிறோம். அதேசமயம் பந்துவீச்சில், ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இல்லை என்றாலும், எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்த சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயாராகும் இருக்கிறார்கள்.
ஸ்பிரிட் ஆஃப் தி கேம்
கடந்த சில தினங்களாகவே ஸ்பிரிட் ஆஃப் தி கேம் குறித்து பேச்சுகள் அடிபடுகின்றன. அது குறித்து தற்போது பேச நினைக்கிறேன். அன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 7 நிமிடங்கள் மட்டுமே விளையாட வேண்டிய சூழல் இருந்தது. அப்போது, அவர்கள் 90 நொடிகள் தாமதாமாக களத்திற்கு வந்தனர். 10, 20 நொடிகள் அல்ல, 90 நொடிகள் தாமதமாக வந்தனார். தாமதிக்கும் திட்டத்தை அனைத்து அணிகளும் செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி செய்யும்போது, கொஞ்சமாவது நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டும். பந்து உங்கள் மீது பட்டால், நீங்கள் பிசியோவை அழைக்கலாம். ஆனால் தாமதமாக வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என பேசினார்.
மேலும் படிங்க : SENA நாடுகளில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த 6 வீரர்கள்!
மேலும் படிங்க: இந்த 10 இந்திய வீரர்களை விட… லியம் டாவ்சன் அதிக சதங்களை அடித்திருக்கிறாராம் – எதில் தெரியுமா?