சாங்சோ,
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது .இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவில் சாத்விக் – சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா – கென்யா மிட்சுஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட சாத்விக் – சிராக் ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஹிரோகி ஒகாமுரா – கென்யா மிட்சுஹாஷி ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
Related Tags :