Senior Citizens Latest Update: மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக நடத்தும் பிரத்யேகமான திட்டங்களில் ஆயுஷ்மான பாரத் திட்டம் மிக முக்கியமான ஒன்று. ஆயுஷ்மான் அட்டை வைத்திருந்தால், மூத்த குடிமக்கள் ஏகப்பட்ட நன்மைகளை அடைய முடியும். குடும்ப உறுப்பினர்களுக்காக ஆயுஷ்மான் அட்டையை உருவாக்க விரும்புவோர் இனு மணிக்கணக்கில் வரிசையில் நின்று சிரமப்படத் தேவையில்லை.
PM JAY: ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவது எப்படி? மொபைல் செயலி இந்த பணியை எளிதாக்கும்
– ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் ஆயுஷ்மான் அட்டையை வீட்டிலேயே உருவாக்கும் வசதியும் கிடைக்கிறது.
– தொலைபேசியில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து சில வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும், அட்டையை உருவாக்கி அதை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கலாம்.
– அதற்கு முன், ஆயுஷ்மான் அட்டை என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆயுஷ்மான் அட்டை என்றால் என்ன?
– 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் ஆயுஷ்மான் அட்டையை வழங்கியது.
– இது ஒரு சுகாதார அட்டை.
– இதன் உதவியுடன், இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
– இது பொருளாதார ரீதியாக பலவீனமான மக்களுக்காக வழங்கப்படுகிறது.
– அட்டையை உருவாக்க முகவரிடம் செல்லவோ அல்லது நீண்ட வரிசையில் நிற்கவோ தேவையில்லை.
– அதை நீங்களே ஆன்லைனில் எளிதாக உருவாக்கலாம்.
ஆயுஷ்மான் அட்டையை ஆன்லைனில் பெறுவது எப்படி?
– முதலில் உங்கள் தொலைபேசியில் ஆயுஷ்மான் செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வுசெய்யவும்.
– பின்னர் லாக் இன் செய்து பயனாளி என்பதைக் கிளிக் செய்யவும்.
– இதற்குப் பிறகு, நீங்கள் கேப்ட்சா மற்றும் மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும்.
– Search For Beneficiary பக்கம் உங்கள் தொலைபேசியில் திறக்கும்.
– அதில் PM-JAY திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் ஆதார் எண்ணை நிரப்பி லாக் இன் செய்ய வேண்டும்.
– இதற்குப் பிறகு, குடும்பத்தில் ஆயுஷ்மான் அட்டை உருவாக்கப்பட்டவர்களின் பட்டியல் தெரியும்.
– யார் பெயர்களில் அட்டை உருவாக்கப்படவில்லையோ, அவர்களின் பெயருக்கு முன்னால் Authenticate என எழுதப்பட்டிருக்கும்.
– அதை டேப் செய்யவும்.
– ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP ஐ நிரப்பி, பின்னர் புகைப்படத்தைக் கிளிக் செய்யவும்.
– இதற்குப் பிறகு, உறுப்பினரின் தொலைபேசி எண்ணையும் அவருடனான உங்கள் உறவையும் குறிப்பிட வேண்டும்.
– பின்னர் e-KYC ஐ முடித்த பிறகு படிவத்தை சமர்ப்பிக்கவும்.
– விவரங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு, ஒரு வாரத்தில் நீங்கள் அந்த உறுப்பினரின் அட்டையை செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஆயுஷ்மான் அட்டை பெற தேவையான ஆவணங்கள்
– ஆதார் அட்டை, தொலைபேசி எண், ரேஷன் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை ஆயுஷ்மான் அட்டை பெற தேவை.
– உங்களிடம் தொழிலாளர் அட்டை, இ-ஷ்ரம் அட்டை அல்லது ஏதேனும் அரசாங்க அடையாள அட்டை இருந்தால், இவற்றின் உதவியுடன் நீங்கள் அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவரா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இலவச சிகிச்சையை பெறுவது எப்படி?
– ஆயுஷ்மான் அட்டை பெற்ற பிறகு, சிகிச்சை பெறுவது இன்னும் எளிதாகிவிடும்.
– இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று அட்டையைக் காட்டுங்கள்.
– மருத்துவமனையில் இருக்கும் ஆயுஷ்மான் மித்ரா உங்கள் அட்டை மற்றும் அடையாளத்தைச் சரிபார்ப்பார்.
– பின்னர் நீங்கள் சிகிச்சைக்காக எந்தப் பணத்தையும் செலுத்தாமல், எந்த வித ஆவணத் தேவையும் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.