‘சி.எம் மு.க ஸ்டாலின் உடல்நிலை பரவாயில்லை. பி.பி அதிகமாகியது தான், ஓய்வெடுக்க காரணம்’ என்கிறார்கள் திமுக-வினர். இதில் முக்கிய பங்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனம் வரை, இப்படி பல உள்ளன. முக்கியமாக புதிய புதிய வடிவில் எதிர்க்கட்சிகள் ஆடும் கேம். குறிப்பாக சமுதாய ரீதியிலான கணக்குகள். வன்னியர்களுக்கான 10.5% கையில் எடுத்து விழுப்புரத்தில் பெரும் போராட்டம் நடத்தியுள்ளார் அன்புமணி. தன் தலைமையை சுற்றும் சிக்கல்களை சமாளிக்க, வன்னியர் அரசியலை கையில் எடுத்தவர், இந்த ஓராண்டும் இதையே தீவிரப்படுத்த திட்டம். இன்னொரு பக்கம், ‘10.5% கொண்டு வந்தது நானே’, என்று வாக்குகளை அறுவடை செய்ய திட்டமிட்டு பயணிக்கிறார் எடப்பாடி. பாஜகவும், எப்படியாவது பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து, வெற்றிடமாக இருக்கும் வடமாவட்டங்களில் NDA கூட்டணி-க்கு வலு சேர்த்துவிட நினைக்கிறார்கள். இதை சமாளிக்கும் வகையில் திமுக-வில் பெரிய திட்டங்கள் இல்லை. இது, எந்தவகையில் திமுகவை பாதிக்கும் என சில புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளனர் சீனியர்கள். அதை சேலம், தர்மபுரி மாவட்ட உதாரணங்கள், உள் அரசியலோடு அறிவாலய கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்தவகையில் சேலம் மண்டல பொறுப்பாளர் என்றவகையில் எ.வ வேலு-வுக்கு காத்திருக்கும் யுத்தம். எடப்பாடியை வீழ்த்துவாரா எ.வ வேலு? எதிர்ப்பார்ப்பில் மு.க ஸ்டாலின்.
