Jasprit Bumrah, Ravi Shastri : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி போல் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவருக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தொடர் முழுவதுமே அவர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை எடுப்பதில் சிரமப்படுகிறார் என்ற விமர்சனமும் இப்போது வலுவாகியிருக்கிறது.
டி20, ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே கட்டுக்கோப்பாக வீசக்கூடிய பவுலர் தேவை, டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை விக்கெட் எடுக்கும் பவுலர்கள் தேவை என முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசும்போது, இன்னொரு முனையில் விக்கெட் எடுக்கும் வகையில் மற்றொரு பவுலர் பந்துவீச வேண்டும். ஆனால், அப்படியான பந்துவீச்சாளர் இந்திய அணியில் இருப்பதாக தெரியவில்லை என கடுமையாக சாடியுள்ளனர். மேலும், பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்வதில் தவறுகள் நடப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது என்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஜஸ்பிரித் பும்ராவிடம் இருந்து விக்கெட் எடுக்கும் டெலிவரிகள் அதிகம் வர வேண்டும், அதற்காக அவர் அடிக்கடி வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும், ஆனால் அவர் அப்படி வீசுவதாக தெரியவில்லை என பலரும் விமர்சித்துள்ளனர்.
இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது கட்டுக்கோப்பாக பந்துகளை வீசும் அதேநேரத்தில், ஸ்டார் பவுலர் சீக்கிரம் விக்கெட் எடுத்தால் மட்டுமே எதிரணியை மனதளவில் வீழ்த்த முடியும். ஆனால், அப்படியான அணுகுமுறை பும்ராவிடம் ஏதும் இல்லாததால் அவரை தவிர்த்து மற்ற பவுலர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் லாவகமாக எதிர்கொள்கின்றனர். எனவே, பும்ரா தான் பந்துவீச்சாளர்களை வழிநடத்தும் இடத்தில் இருந்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பிளேயர்கள் கூறியுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுப்பதற்கான முயற்சிகளை கூட்டினால் மட்டுமே இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், இல்லையென்றால் டிரா கூட செய்ய முடியாது என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை ஒருநாள் போட்டியில் எதிர்கொள்வதைபோல் ஆடுவதை பார்த்து ரவிசாஸ்திரி கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், ஈஸியாக பவுண்டரி அடிக்கக்கூடிய டெலிவரிகளை பும்ரா, சிராஜ் மற்றும் கம்போஜ் வீசிக் கொண்டிருப்பதாகவும், இது சுத்த குப்பைதனமான பந்துவீச்சு என்று விளாசியுள்ளார். ரவிசாஸ்திரியின் இந்த கடுமையான விமர்சனங்கள் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றால் மட்டுமே 4வது டெஸ்ட் போட்டியில் ஏதாவது மாற்றத்தை இனி பார்க்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிங்க: கள்ள உறவில் சிக்கிய 4 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்… அதில் 2 பேர் கேப்டன்கள் வேறு!
மேலும் படிங்க: வெளியேறும் ரிஷப் பண்ட்… உள்ளே வரும் இன்னொரு அதிரடி வீரர் – வலுபெறும் இந்திய அணி!