வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: வலிமை​யான ராணுவமே நாட்​டின் பாது​காப்​பு, பெரு​மைக்கு அடிப்​படை என்று ராணுவ அதி​காரி​களுக்​கான பாராட்டு விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். புயல், மழை, வெள்​ளம், நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரழி​வு​களின்​போது மேற்கொள்ளும் மீட்​பு, நிவாரண பணி​கள் மற்​றும் ‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்​கை​யில் இந்​திய ராணுவ தென் பிராந்​திய பகுதியின் அசா​தாரண பங்​களிப்பை பாராட்​டி, நன்றி தெரிவிக்​கும் விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், ராணுவத்​தின் 16 மெட்​ராஸ் (திரு​வாங்​கூர்), 35 ஃபீல்ட் படைப்​பிரிவு, ஆவடி ஆயுத தொழிற்​சாலை, 65 கம்​பெனி ராணுவ சேவை படை (விநி​யோகம்) ஆகிய 4 பிரிவு​களை சேர்ந்த ராணுவ அதி​காரி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி பாராட்டு சான்​றிதழ் வழங்கி கவுர​வித்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மூலம் இந்​திய ராணுவத்​தின் வலிமை, ஒற்​றுமை, அர்ப்​பணிப்பு உணர்வு வெளிப்​பட்​டது. ராணுவம் பலவீன​மாக இருந்​தால் நட்பு நாடு​கள்​கூட எதிரி​யாக பார்க்​கும். வலிமை​யான ராணுவமே நாட்டின் பாது​காப்​பு, பெரு​மைக்கு அடிப்​படை.

அந்த வலிமை​தான் மரி​யாதையை உரு​வாக்​கும். அது சமா​தானத்​தை​யும் கொண்​டு​வரும். ராணுவத்​தில் மன உறு​தி, தொழில்நுட்ப திறன் மிக முக்​கி​யம். இத்​தகைய பாராட்டு விழா மூலம் ராணுவத்​தினரின் தியாகம், வீரத்தை பாராட்​டு​கிறோம். பொது​மக்​கள் – ராணுவத்​தினர் இடையி​லான உறவு மிக​வும் உணர்​வுப்பூர்​வ​மானது. அதை நேரிலேயே பார்த்​துள்​ளேன்.

இமால​யத்​தின் பனிச்​சரிவு​கள், வடகிழக்கு மலைப் பகு​தி​கள், ராஜஸ்​தானின் வறண்ட பாலை​வனம் என எங்​கிருந்​தா​லும் ஒரே நோக்​கத்​துக்​காக பணி​யாற்றி வரு​கிறது நமது ராணுவம். ‘கார்​கில் விஜய் திவஸ்’ (வெற்றி தினம்) 26-ம் தேதி (இன்​று) கொண்​டாடப்​படு​கிறது. கார்​கில் போர் வெற்றி வெறும் ராணுவ வெற்​றி​யாக இல்​லாமல், நம் தேசத்​தின் ஒற்​றுமை, உறு​திக்​கான சான்​றாக அமைந்​தது.

இந்​தி​யா​வில் பல மொழி, மதம், கலாச்​சா​ரம் இருந்​தா​லும், தேசபக்​திக்கு நல்ல எடுத்​துக்​காட்​டாக திகழ்​கிறது நமது ராணுவம். அது ஒரு குடும்​பம்​போல உள்​ளது. உலகின் முன்​னேற்​றத்​துக்கு ஏற்ப, இந்​திய ராணுவ​மும் வளர வேண்​டும். இவ்​வாறு பேசி​னார். தென் பிராந்​திய ராணுவ தலைமை அதி​காரி லெப்​டினென்ட் ஜெனரல் கே.எஸ்​.பி​ரார், ஆளுநரின்​ செயலர்​ கிர்​லோஷ் குமார்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.