India vs England, Playing XI Changes: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் (Anderson Tendulkar Trophy) இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகின்றன. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
India vs England: இரு அணிகளுக்கும் கடைசி வாய்ப்பு
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது. தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கும், தொடரை கைப்பற்ற இங்கிலாந்துக்கும் இதுதான் கடைசி வாய்ப்பு எனலாம். நான்காவது போட்டியே நேற்றுதான் (ஜூலை 27) முடிந்த நிலையில், மூன்று நாள்களில் அடுத்த போட்டி நடைபெறுவதால் இரு அணி வீரர்களும் பெரியளவில் சோர்வடைந்திருப்பார்கள் என்பதால் இரு அணிகளும் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்களை செய்ய இருக்கிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.
India vs England: இங்கிலாந்து என்ன மாற்றம் செய்யும்?
இங்கிலாந்து அணி (Team England) கடைசி போட்டிக்கான ஸ்குவாடில் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டனை சேர்த்திருக்கிறது. இதன்மூலம் அவர் 5வது போட்டியில் விளையாடுவார் என ஏறத்தாழ உறுதியாகிறது. கிறிஸ் வோக்ஸ் அல்லது பிரைடன் கார்ஸ் ஆகியோருக்கு பதில் அவர் அணிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாற்றங்களும் இங்கிலாந்து தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி நாளையோ, நாளை மறுதினமோ பிளேயிங் லெவனை அறிவிக்க வாய்ப்புள்ளது.
India vs England: இந்திய அணி செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்?
இந்திய அணியை (Team India) பொருத்தவரையில், வெற்றி பெறுவதற்கான பிளேயிங் லெவனை அமைத்தே ஆக வேண்டும். இந்திய அணி நடப்பு தொடரில் அதிக இடங்களில் சொதப்பியது என்றால் இரண்டு விஷயங்களை குறிப்பிடலாம். ஒன்று, களத்தில் கேப்டன் சுப்மான் கில்லின் மோசமான யுக்திகள் மற்றும் மற்றொன்று, சொதப்பலான பிளேயிங் லெவன் காம்பினேஷன் (Team India Playing XI). அந்த வகையில், 5வது போட்டியில் இந்த தவறுகளை செய்யாமல், பிளேயிங் லெவனில் இந்த 4 மாற்றங்களை செய்தால் காம்பினேஷனும் பேலன்ஸாக இருக்கும், இங்கிலாந்துக்கும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் இருக்கும்.
1. ரிஷப் பண்ட் பதில்…
இந்த மாற்றம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ரிஷப் பண்ட் (Rishabh Pant) காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதில் நாராயணன் ஜெகதீசன் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் பிளேயிங் லெவனில் அவருக்கு பதில் துருவ் ஜூரேலுக்கே (Dhuruv Jurel) வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் பேட்டிங்கில் அதிக திறன் பெற்றவர் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறார். கடந்த 2 போட்டிகளில் பண்டுக்கு பதில் பேட்டிங் விளையாடாமல் முழுமையாக விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்டார். எனவே இவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும்.
2. ஷர்துல் தாக்குர் வெளியே…
இந்தியா மீண்டும் மீண்டும் நம்பர் 8இல் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டரை விளையாட நினைப்பது பெரிய தவறாகும். இங்கிலாந்து பேட்டிங் அணுகுமுறை மற்றும் சூழலை பொருத்து நம்பர் 8இல் குல்தீப் யாதவை (Kuldeep Yadav) குறைந்தபட்சம் 2 போட்டிகளிலாவது விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால், நீண்ட பேட்டர்கள் தேவை என்ற தடுப்பாட்ட மனநிலையில் இந்தியா குல்தீப் யாதவை புறந்தள்ளியது.
இங்கிலாந்து பேட்டர்களை அதிகம் யோசிக்க வைக்கக் கூடியவராகவும், 2வது இன்னிங்ஸில் மிரட்டலான பந்துகளை வீசக்கூடியவர் என்பதால் இவரை எடுத்தே ஆக வேண்டும் என அஸ்வின் ஒற்றைக் காலில் மட்டுமே நிற்கவில்லை. அவர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. எனவே ஷர்துலுக்கு (Shardul Thakur) பதில் குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம்.
3. பும்ரா, சிராஜ் வேண்டவே வேண்டாம்…
ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார், சிராஜ் (Mohammed Siraj) தயவுசெய்து அடுத்த போட்டியில் விளையாட வேண்டாம். அது எப்படி வென்றே ஆக வேண்டிய போட்டியில் இருவரையும் வேண்டாம் என சொல்ல முடியும் என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. ஆனால் அதுவே நல்ல முடிவாக இருக்கும். சிராஜ் கடந்த 4 போட்டிகளில் மட்டும் 139 ஓவர்களை வீசியிருக்கிறார். இதனால் அவருக்கு ஓய்வு கண்டிப்பாக தேவை. பும்ரா விளையாடுவது அவர் கையில்தான் இருக்கிறது.
ஆகாஷ் தீப் (Akash Deep) 5வது போட்டிக்கு முன் உடற்தகுதி பெற்றுவிட்டால் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம். அர்ஷ்தீப் சிங்கும் (Arshdeep Singh) உடற்தகுதி பெறும்பட்சத்தில் அணிக்குள் கொண்டு வரலாம். அன்சூல் கம்போஜ் தொடர்வார் எனலாம். ஒருவேளை ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங் இருவரில் யாராவது உடற்தகுதி பெறாவிட்டால் பிரசித் கிருஷ்ணா மட்டுமே ஆப்ஷனாக இருப்பார். அப்போது வேண்டுமானால் சிராஜை எடுக்கலாம்.
மேலும் படிக்க | Ind vs Eng: இந்தியாவுக்கு எதிராக சிஎஸ்கே வீரர்.. இங்கிலாந்து மெகா பிளான்!
மேலும் படிக்க | IND vs ENG: ரிஷப் பந்த், பும்ரா நீக்கம்! 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
மேலும் படிக்க | அணியில் இருந்து விலகல்? 4வது டெஸ்ட் முடிந்த பிறகு கம்பீர் கொடுத்த முக்கிய அப்டேட்!