நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்​கப்​படு​கிறது. குடி​யிருப்பு பகு​தி​களின் அரு​கிலேயே இலவச​மாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்​ளலாம். சென்னை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் மேல்​நிலைப்​பள்​ளிவளாகத்​த​தில் “நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வ​ரால் தொடங்​கப்​பட​வுள்​ளது.

இதையொட்​டி, பள்ளி வளாகத்​தில் முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில் குமார், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நலம் காக்​கும் ஸ்டா​லின் எனும் திட்​டம் மக்​களை தேடி முழு உடல் பரிசோதனை திட்​டம் என்​கின்ற வகை​யில் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்​பது தனி​யார் மருத்​து​வ​மனை​களுக்கு சென்​றால் ரூ.15 ஆயிரம் வரை செல​வாகும். முழு உடல் பரிசோதனை என்பது இன்​றைய கால​கட்​டத்​தில் மக்​களுக்கு மிக​வும் அவசி​ய​மான ஒன்​றாகும். நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டத்தை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வர் தொடங்கி வைக்​கிறார்.

இந்த திட்​டத்​தில் பொது மருத்​து​வம், பொது அறுவை சிகிச்​சை, எலும்​பியல் மருத்​து​வம், மகப்​பேறி​யியல், மகளிர் மருத்​து​வம், குழந்தை மருத்​து​வம், இதயவியல், நரம்​பியல் மருத்​து​வம், தோல் மருத்​து​வம், பல் மருத்​து​வம், கண் மருத்​து​வம், காது மூக்கு தொண்டை மருத்​து​வம், மனநல மருத்​து​வம், இயன்​முறை மருத்​து​வம், நுரை​யீரல் மருத்​து​வம் மற்​றும் இந்​திய முறை மருத்​து​வம் ஆகிய அனைத்​தும் இடம்​பெறுகிறது.

அனைத்து தரப்பு மக்​களுக்​கும் ஒவ்​வொரு சனிகிழமை​யிலும், காலை 9 முதல் மாலை 4 மணிவரை அவர​வர் குடி​யிருப்பு பகு​தி​கள் சார்ந்தே முகாம் நடத்​தப்​படும். இதற்​கான அறி​விப்​பு, துண்டு பிரசுரங்​கள் மூல​மாக அப்​பகுதி மக்​களுக்கு தெரியப்​படுத்​தப்​படும்.

இதே முகாமில் மாற்​றுத்​திற​னாளி​கள் பரிசோ​திக்​கப்​பட்​டு, எத்​தனை சதவீதம் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது என்​ப​தற்​கான சான்​றிதழ் வழங்​கப்​படும். புதிய காப்​பீடு திட்​டத்​தில் இணைவதற்​கும் மு​காமில் விண்​ணப்​பிதற்​கான வசதி ஏற்​படுத்​தப்​படும். இதற்​காக, மாநிலம் முழுதும், 1,256 மு​காம்​கள்​ நடத்​தப்​படும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.