பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். ப. சிதம்பரத்தின் இந்த பேச்சு பாஜக-வினரை கொதிப்படைய வைத்துள்ளதுடன் ப. சிதம்பரம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்குவதற்கு சற்று முன்பு, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் அறிக்கை ஒரு அரசியல் புயலை உருவாக்கியுள்ளது. ஊடகம் ஒன்றின் […]