India vs England, Rishabh Pant Injury Placement: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது.
India vs England: வெறியோடு காத்திருக்கும் இந்திய அணி
அந்த வகையில், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 2-2 என்ற கணக்கில் தொடர் சமநிலை பெறும், போட்டி டிராவானால் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும். ஒருவேளை இந்தியா தோற்றால் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றும். எனவே இந்திய அணி வெற்றி பெறவே அதிகம் முயற்சிக்கும்.
India vs England: இந்திய அணியில் வரும் மாற்றங்கள்
இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான பிளேயிங் லெவனை அமைத்தே ஆக வேண்டும். தற்போது ரிஷப் பண்டும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். கடைசி டெஸ்டில் பும்ரா விளையாடுவதும் கேள்விக்குறிதான். ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா…? உள்ளிட்ட பல கேள்விகள் இந்திய அணியை சுற்றி இருக்கின்றன.
India vs England: ரிஷப் பண்டுக்கு பதில் நாராயணன் ஜெகதீசன்
இந்தச் சூழலில், ரிஷப் பண்டுக்கு மாற்று வீரராக தமிழ்நாட்டு வீரர் நாராயணன் ஜெகதீசனுக்கு (Narayan Jagadeesan) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விக்கெட் கீப்பர் பேட்டராக ஸ்குவாடில் துருவ் ஜூரேல் இடம்பெற்றிருக்கிறார். ரிஷப் பண்ட் இல்லாத இடத்தில் துருவ் ஜூரேலுக்கு இடம் கிடைக்குமா அல்லது நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில், இஷான் கிஷன், கேஎஸ் பரத் உள்ளிட்ட விக்கெட் கீப்பர் பேட்டர்கள் இருக்கும் வேளையில் ஏன் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.
Rishabh Pant ruled out of fifth Test due to injury; N Jagadeesan named replacement.
All The Details #TeamIndia | #ENGvIND
— BCCI (@BCCI) July 27, 2025
India vs England: யார் இந்த நாராயணன் ஜெகதீசன்?
முதலில் இந்த நாராயணன் ஜெகதீசன் யார் என்று பார்க்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 வயதான இவர் மூன்று பார்மட்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் எனலாம். சமீப காலமாகவே ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2023-24 சீசனில் 816 ரன்களை 74.18 சராசரியிலும், 2024-25 சீசனில் 674 ரன்களை 56.16 சராசரியிலும் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக 52 போட்டிகளில் 10 சதங்கள், 14 அரைசதங்கள் என 3373 ரன்களை 47.50 சராசரியில் அடித்துள்ளார்.
அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடிய இவர் 41 பந்துகளில் 81 ரன்களை குவித்திருந்தார். அதேபோல், 2022ஆம் ஆண்டில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணியில் விளையாடிய இவர் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 277 ரன்களை குவித்தார். அதில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் அடக்கம். மூன்று பார்மட்களிலும் உள்நாட்டு போட்டிகளில் இவர் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தனது திறனை நிரூபித்திருக்கிறார்.
India vs England: கம்பீர் இவரை தேர்வு செய்தது ஏன்?
2016ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளில் இருந்தார். ஆனால் பெரியளவில் சோபிக்கவில்லை. கடந்த 2025 மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. கௌதம் கம்பீருக்கு மூன்று பார்மட்களிலும் விளையாடக்கூடியவர்கள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடக்கூடியவர்கள் மீதான ஈர்ப்பு அதிகம் என்பதாலேயே தற்போது நாராயணன் ஜெகதீசனுக்கு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
India vs England: இஷான் கிஷன், கேஎஸ் பரத் இல்லை ஏன்?
இஷான் கிஷனும் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இஷான் கிஷன் தான் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடியிருந்தார். அதே நேரத்தில், பண்ட் கார் விபத்தில் சிக்கியபோது டெஸ்டில் கேஎஸ் பரத் தான் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போதைய அவரின் பேட்டிங் பார்மால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் பெரும்பாலும் துருவ் ஜூரேலுக்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். நாராயணன் ஜெகதீசன் அவருக்கு பேக்-அப்பாக இருக்கவே வாய்ப்பு்கள் அதிகம்.
மேலும் படிக்க | IND vs ENG: ரிஷப் பந்த், பும்ரா நீக்கம்! 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
மேலும் படிக்க | அணியில் இருந்து விலகல்? 4வது டெஸ்ட் முடிந்த பிறகு கம்பீர் கொடுத்த முக்கிய அப்டேட்!
மேலும் படிக்க | Rishabh Pant: இன்று ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!