Ind vs Eng 5th Test: இந்தியா டெஸ்ட் அணி ஜூன் மாதம் பாதிக்கும் மேல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணியும் வென்றது. நான்காவது போட்டி டிராவில் முடிவடைந்தது. 4வது போட்டி இங்கிலாந்தின் பக்கமே சென்று கொண்டிருந்தது. இதனை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் இழுத்து பிடித்து டிராவை நோக்கி நகர்த்தி சென்றனர்.
கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்போது இரு அணிகளும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இப்போட்டி வரும் ஜூலை 31ஆம் தேதி கென்னிங்டனின் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதனை இங்கிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும். அதே சமயம் இந்திய அணி இப்போட்டியை வென்று தொடரை சமன் செய்ய நினைக்கும். இந்த நிலையில், இங்கிலாந்து அணியை மேலும் வலுப்படுத்த ஜேமி ஓவர்டனை சேர்த்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்குள் சிஎஸ்கே வீரர்
Jamie Overton Added England Squad: கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு தோபட்டை மற்றும் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரால் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல்போனால், அவருக்கு மாற்று வீரராக ஜேமி ஓவர்டனை இந்திய அணி சேர்த்துள்ளது. அப்படி இல்லையென்றால், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு ஓய்வளித்துவிட்டு அவர்களுக்கு பதிலாக ஜேமி ஓவர்டனை அணிக்குள் கொண்டு வரலாம்.
ஜேமி ஓவர்டனை ஒரு ஆல்-ரவுண்டர் என்பதால், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவரால் சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும் என இங்கிலாந்து அணி நம்புகிறது. ஜேமி ஓவர்டன் 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதில் அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். பேட்டிங்கில் 97 ரன்களும் பவுலிங்கில் 2 விக்கெட்டையும் வீழ்த்தி அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தி உள்ளார். எனவே இவரை அணியில் சேர்க்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி கூடுதல் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தேல், கஸ் அட்கின்சன், சாக் க்ராலி, பென் டக்கெட், ஓலி போப், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன்.