பஹல்காமில் தாக்கியவர்கள் பாக். தீவிரவாதிகள்தான்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா திட்டவட்ட பேச்சு

புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார்.

மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் என கூட்டுப் படையினர் எடுத்த நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சுலைமான் என்கிற பைசல், அப்ஹான், ஜிப்ரான் என்ற 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சுலைமான் என்பவர் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஏ அந்தஸ்தில் இருந்த கமாண்டர் அதேபோல் அப்ஹானும் ஜிப்ரானும் லஷ்கர் தீவிரவாதிகள்.

தீவிர​வா​தி​கள் பாகிஸ்​தானில் இருந்து வந்​தவர்​கள்​தான் என்​ப​தற்கு மத்​திய அரசிடம் ஆதா​ரங்​கள் உள்​ளன. சுட்​டுக் கொல்​லப்​பட்ட தீவிர​வா​தி​களில் 2 பேரிடம் இருந்த பாகிஸ்​தான் வாக்​காளர் அட்​டைகள் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன், தீவிர​வா​தி​களிடம் இருந்து கண்​டெடுக்​கப்​பட்ட சாக்​லேட்​டு​கள் கூட பாகிஸ்​தானில் தயாரிக்​கப்​பட்​ட​வை​தான்.

கடந்த 1948-ம் ஆண்டு பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரை திரும்ப மீட்​டெடுக்க நமது ராணுவம் நிலை​கொண்​டிருந்​தது. ஆனால், அப்​போதைய பிரதமர் ஜவகர்​லால் நேரு ஒருதலைபட்​ச​மாக போரை நிறுத்​தி​னார். அது​தான் இன்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் இருப்​ப​தற்கு காரணம்.

‘பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள், பாகிஸ்​தானில் இருந்​து​தான் வந்​தார்​கள் என்​ப​தற்கு ஆதா​ரங்​கள் உள்​ளன​வா?’ என்று காங்​கிரஸை சேர்ந்த முன்​னாள் உள்​துறை அமைச்​சர் ப.சிதம்​பரம் 2 நாட்​களுக்கு முன்​னர் கேள்வி எழுப்​பி​னார். அது எனக்கு மிக​வும் வேதனை​யாக இருக்​கிறது. இதன் மூலம் ப.சிதம்​பரம் என்ன சொல்ல வரு​கிறார்? யாரை பாது​காக்க வேண்​டும் என்று அவர் நினைக்​கிறார்? பாகிஸ்​தானை பாது​காப்​ப​தன் மூலம் உங்​களுக்கு என்ன லாபம்?

காங்​கிரஸ் சார்​பில் மன்​மோகன் சிங் பிரதம​ராக இருந்த போது, இந்​தி​யா​வில் பல தீவிர​வாத தாக்​குதல்​கள் நடந்​தன. அப்​போது அவர்​கள் அமை​தி​யாக உட்​கார்ந்​திருந்​தார்​கள். ஆனால், ஆபரேஷன் சிந்​தூரின் போது நமது ராணுவ உயர​தி​காரி​கள், பாகிஸ்​தான் ராணுவ உயர​தி​காரிகளை தொடர்பு கொண்டு பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது குறித்து தகவல் தெரி​வித்​தனர். நமது நாட்டை பாது​காக்​கும் உரிமை​யின் அடிப்​படை​யில் அந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக நமது ராணுவ அதி​காரி​கள் அவர்​களிடம் தெரி​வித்​தனர்.

மன்​மோகன் அரசை போல தீவிர​வாதத்தை வேடிக்கை பார்க்​காது தற்​போதைய மோடி தலை​மையி​லான அரசு. பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்ட தகவலை கேட்டு எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் மகிழ்ச்சி அடை​வார்​கள் என்று எதிர்​பார்த்​தேன். ஆனால், தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர்​களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று தெரி​கிறது. இது எந்த மாதிரி அரசி​யல் என்று தெரிய​வில்​லை. இவ்​வாறு அமைச்​சர் அமித் ஷா பேசி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.